தேசம்

img

சென்னையிலிருந்து உள் நாட்டு விமான இயக்கம் தொடங்கியது

கொரோனா பெருந்தொற்று காரணமாக த நாடு முழுவதும் உள்நாட்டு விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில் தமிழகத்தில் நாளுக்கு நாள் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  இந்த சூழலில்  தமிழக அரசின் சார்பில் உள்நாட்டு விமான சேவை தொடங்குவதற்கான ஒப்புதல் நேற்று இரவு அளிக்கப்பட்டது.

இதையடுத்து சென்னை உள்நாட்டு விமான முனையத்தில்  கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், சுகாதார ஏற்பாடுகளை  நேற்று விமான நிலைய சிறப்பு அதிகாரி ஹன்ஸ்ராஜ் வர்மா, சுகாதார துறை செயலர் பீலா ராஜேஷ், சென்னை மாவட்ட ஆட்சியர் சீத்தாலட்சுமி, சைலேந்திர பாபு உள்ளிட்டோர்  நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது விமான நிலையத்தில் தனி மனித இடைவெளியை கடைபிடிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

சொந்த ஊருக்கு செல்வதற்காக பயணிகள் இன்று அதிகாலை 2 மணியிலிருந்து விமான நிலையத்தில் குவிய தொடங்கினர். காலை 6.35 மணிக்கு இண்டிகோ விமானம் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றது. அதனைத்தொடர்ந்து மற்ற விமானங்களும் புறப்பட்டன.
டிஜிட்டல் பலகைகளில் கொரோனா பெருந்தொற்று குறித்த விழிப்புணர்வு காட்சிகள் தொடர்ந்து ஒளிபரப்ப படுகிறது. இந்நிலையில் பயணிகள் அதிகம் இல்லாத பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இன்று சென்னையில் இருந்து இயங்கப்படும் விமானங்கள்

டெல்லி - 6:35 - (இண்டிகோ)பெங்களூர் - 6:45 - (இண்டிகோ)

மதுரை - 7:05 - (இண்டிகோ)

பெங்களூர் - 7:15 - (ஸ்பைஸ் ஜெட்)

போர்ட் பிளேர் - 8:35 - (இண்டிகோ)

டெல்லி - 8:55 - (ஏர் ஏசியா)

கோயம்புத்தூர் - 9:15 - (ஸ்பைஸ் ஜெட்)

கவுஹாத்தி - 9:25 - (இண்டிகோ)

ரத்து செய்யப்பட்ட விமானங்கள்

மதுரை -  5:40 (இண்டிகோ)

மும்பை - 6 : 15 (இண்டிகோ)

மும்பை - 6 :25 (ஸ்பைஸ் ஜெட்)

பெங்களூர் -7: 20 (ஸ்பைஸ் ஜெட்)

சேலம் 7: 25

கொல்கத்தா 7 :35 (இண்டிகோ)

கெஹாத்தி 7 : 45 (ஸ்பைஸ் ஜெட்)

கொச்சி 8 : 00

பெங்களூர் 8 : 15 (ஏர் ஏசியா)

ஹைதராபாத் 8: 30 (இண்டிகோ)

புனே 9 : 00 (இண்டிகோ)

மும்பை 9 : 00 (இண்டிகோ)

ஹைதரபாத் 9 : 05 (ஏர் ஏசியா)

பெங்களூர் 9 :20 (ஸ்பைஸ் ஜெட்)

ஹைதராபாத் 9 :30 (இண்டிகோ)

மேற்கண்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், டிக்கெட் முன்பதிவு செய்திருந்த பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். 

;