தேசம்

img

இந்தியாவில் 2 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு -62 பேர் பலி

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 2000ஆக உயர்ந்துள்ளது.
சீனாவின் உகான் மாகாணத்தில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனாவைரஸ் இன்று சுமார் 200 நாடுகளில் பரவி உள்ளது. இந்நிலையில் இந்தியாவிலும் தொடர்ந்து கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுமார் 2000 பேர் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றால் இதுவரை 62 பேர் உயிரிழந்துள்ளனர் என தி இந்து இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது. இதில் மகாராஷ்டிராவில் மட்டும் அதிக பட்சமாக 16 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

;