தேசம்

img

இந்தியாவின் கோழி இறைச்சி சந்தையை கைப்பற்ற டிரம்ப் சூழ்ச்சி

தில்லி 
   இந்தியாவுக்கு வருகை தரும் டிரம்ப் இந்தியாவின் பால் பொருட்கள் மற்றும் கோழி இறைச்சி சந்தையை முற்றாகக் கைப்பற்றுவதற்குச் சூழ்ச்சி செய்து இருக்கிறார் என்று விவசாயிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

டிரம்பை வரவேற்க உள்ள மோடி பால் பொருட்கள் மற்றும் கோழி இறைச்சி சந்தையை அமெரிக்காவுக்குத் திறந்து விடுவதற்கான வர்த்தக உடன்பாடுகளில் கையெழுத்திட இருக்கிறார். இந்த வர்த்தக உடன்பாட்டின் படி ஒவ்வொரு ஆண்டும் ரூ.42 ஆயிரம் கோடிக்கும் அதிகமான பால் பொருட்கள், கோழி இறைச்சி, கோழிக் கால்கள் துருக்கியிலிருந்து தாராளமாக இந்தியாவிற்கு இறக்குமதி செய்வதற்கான சூழல் ஏற்படும். 

தற்போதைய சூழ்நிலையில் இந்தியாவில் கிட்டத்தட்ட 100 பில்லியன் அதாவது 10 கோடி மக்கள் பால் உற்பத்தி உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் ஏழை விவசாயிகள. குறிப்பாக ஏராளமான விவசாயிகள் கோழி வளர்ப்பில் தான் அதிக ஈடுபட்டுடன் இருக்கிறார்கள். பால் பொருட்கள் மற்றும் கோழி இறைச்சி இறக்குமதி தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானால் 10 கோடி உற்பத்தியாளர்களைக் கடுமையாகப் பாதிக்கும் என்று அகில இந்திய விவசாயிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

;