தேசம்

img

ஆபத்தான வெற்றிடம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பிரதான அரசியல்வாதிகள் அவமதிக்கப்பட்டால்  அந்த இடம் பிரிவினைவாதிகளால் நிரப்பப்படும்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்ப தாக கடந்த திங்களன்று அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டிருப்பது, காஷ்மீரில் சுதந்திரத்தை இல்லாமல் செய்வதற்காக அரசாங்கம் மிகவும் ஆபத்தான தரம் தாழ்ந்த நிலை க்குச் சென்றிருக்கிறது என்பதன்  அடையாளமாகும். 81 வயதாகும் முது பெரும் தலைவரான பரூக் அப்துல்லா, மூன்று முறை முதலமைச்சராகவும், மத்திய அமைச்சராகவும் மற்றும் நான்கு முறை நாடாளுமன்ற உறுப்பி னராகவும் இருந்திருக்கிறார். தற்போது ஸ்ரீநகர் தொகுதியின் மக்களவை உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.  

அவருடைய தந்தையும்  தேசிய மாநாட்டுக் கட்சியின் நிறுவனருமான ஷேக் அப்துல்லா, 1947இல் நாட்டின் பிரி வினைக்கு இட்டுச் சென்ற ‘இரு தேச’க் கொள்கையை நிராகரித்து, காஷ்மீர் முஸ்லீம் மக்களுக்குத் தலைமை தாங்கி இயக்கம் நடத்தியவர். அதே போன்று பரூக் அப்துல்லாவின் மகன் உமர் அப்துல்லா, முன்னாள் முதல மைச்சர் மற்றும் மத்திய அமைச்சர். அவரும், ஆகஸ்ட் 5 முதல் அரசாங் கத்தால் தடுப்புக் காவலில் வைக்கப் பட்டிருக்கிறார்.

பாஜகவும், மத்திய அரசும் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தைச் சிதைத்து தாங்கள்  மேற்கொண்ட நடவடிக்கைக ளுக்கு மக்களின் ஆதரவு அமோக மாக இருப்பதாகக் கூறிக்கொண்டி ருக்கின்றன. இருந்தபோதிலும், காஷ்மீர் பள்ளத்தாக்கு அன்றைய தேதி யிலிருந்து முழுமையாக மூடப்பட்டி ருக்கிறது.   காஷ்மீர் பள்ளத்தாக்கில் தங்கள் செல்வாக்கு வீழ்ச்சியடைந்து கொண்டிருப்பதாகக் கூறப்பட்டபோதி லும், பரூக் அப்துல்லா,  காஷ்மீரின் எதிர் காலம் மதச்சார்பின்மை மற்றும் பன்முகத்தன்மையுடனான இந்தியா வாக தொடரும் என்று உறுதிபடக் கூறிக் கொண்டிருக்கிறார். அவரை, பொதுப் பாதுகாப்புக்கு ஆபத்தானவர் என்று கருதுவது நீதியின் கேலிக்கூத்தாகும். ஜனநாயகக் கொள்கைகளின் மீதான தாக்குதலாகும்.

அவர் தடுப்புக் காவலில் அடைக்கப் பட்டிருக்கும் விதம், சட்டத்தின் ஆட்சியை முழுமையாக அவமதித்திருப்பதற்கான அடையாளமாகும். உச்சநீதிமன்றத் தின் முன் அவர் ஆஜர்படுத்தப்பட வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மனு தாக்கல் செய்து அது பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதற்குச் சற்று முன்புதான் அரசாங்கத்தின் தரப்பில் அவர் ‘கடந்த 12 நாட்களாக பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் காவலில் அடைக்கப்பட்டிருப்பதாக’ அறிவிக்கப்பட்டது.

சென்ற மாதம் நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய மாநாட்டுக்கட்சித் தலைவர் தடுப்புக் காவலில் வைக்கப்படவில்லை என்றும், மாறாக அவர் அவரது இல்லத்தில் அவரது சொந்தவிருப்பத்தின்படி தங்கி யிருக்கிறார் என்றும் கூறியிருந்தார். ஆனால் இப்போது அவருடைய தடுப்புக் காவல், மிகவும் கடுமையான ஒரு சட்டத்தின்கீழ் சட்டப்பூர்வமாக்கப் பட்டிருக்கிறது. இச்சட்டத்தின்கீழ் பரிகா ரம் காண்பது மிகவும் கடினம். இதன்கீழ் ஒருவரை இரண்டு ஆண்டுகள் வரை எவ்வித விசாரணையுமின்றி சிறையில் அடைத்து வைத்திருக்க முடியும். காஷ்மீர் மாநிலத்தின் முதுபெரும் அரசியல்கட்சித் தலைவர் ஒருவரை  அவமானப்படுத்தி, வாய்ப்பூட்டு போடும் நடவடிக்கை என்பது பொது அரசியல் நீரோட்டத்தில் செயல்பட்டுக்கொண்டி ருக்கின்ற மிதவாத அரசியல்வாதிகளை ஓரங்கட்ட முனையும் ஆபத்தான உத்தி யாகும். காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் பிடிபி கட்சியின் தலைவருமாகிய மெஹபூபா மற்றும் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்து  அரசியல் வாதியாக மாறியுள்ள ஷா ஃபாசல் உட்பட அநேகமாக காஷ்மீர் மாநி லத்தின் அனைத்து அரசியல்கட்சித் தலைவர்களும் சிறையில் இருக்கிறார் கள். தங்களுக்கு எதிராக அனைத்துவித மான அவதூறுகளும் அள்ளிவீசப் பட்டபோதிலும், அச்சுறுத்தல்கள் ஏற் படுத்தப்பட்டபோதிலும் அவற்றை எதிர்த்துக்கொண்டே தங்கள் அரசியல் நடவடிக்கைகளை அவர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள்.  

காஷ்மீர் அரசியல்வாதிகள், அர சமைப்புச் சட்டத்தின்கீழ் வழங்கப்பட்டி ருந்த சிறப்பு அந்தஸ்தை, தங்களின் ஊழல் நடவடிக்கைகள் மற்றும் உற வினர்களுக்குச் சலுகை காட்டுவதற்கா கத் துஷ்பிரயோகம் செய்துவந்தார்கள் என்று இப்போது வாதிடுவது கபடத் தனமான ஒன்றேயாகும். இத்தகைய பிரச்சனைகள் நாட்டில் எந்த மாநிலத்தில் இல்லை? இந்திய அரசிய லில் அனைத்து மாநிலங்களிலும் இந்நோய் மிகவும் புரையோடிப் போயி ருக்கிற ஒன்றேயாகும். காஷ்மீரில் உள்ள இந்திய ஆதரவு அரசியல் சக்தி களை அரசாங்கம் இவ்வாறு அறநெறி யற்ற முறையில் நடத்துமேயானால், நிச்சயமாக இது, ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தும்.

பொதுவாழ்வில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளை இந்தியாவிற்கு எதிரானவர்கள் என்று திட்டமிட்ட முறையில் முத்திரை குத்தி அவர்களின் செயல்பாடுகளை ஊக்க மிழக்கச் செய்து ஒரு வெற்றிடத்தை உருவாக்குவீர்களேயானால், அந்த இடம் இந்தியாவிற்கு எதிராகச் செயல் படும் சக்திகளால் நிரப்பப்படுவதற்கே வழிவகுத்திடும்.

நன்றி: தி இந்து தலையங்கம், 
தமிழில்: ச.வீரமணி

;