தேசம்

img

மதச்சார்பற்ற இந்தியாவாகத் தொடர்வதா, இல்லையா என்பதை தீர்மானிக்கும் தேர்தல் - பரூக் அப்துல்லா பேச்சு

நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தல், இந்தியா மதச்சார்பற்ற இந்தியாவாகத் தொடர்வதா, இல்லையா என்பதைத் தீர்மானித்திடும் தேர்தலாகும் என்று ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா கூறினார். பரூக் அப்துல்லா, சனிக் கிழமையன்று ஸ்ரீநகரில் தன்னுடைய தேசிய மாநாட் டுக் கட்சியின் ஊழியர்கள் கூட்டத்தில் பேசியதாவது: நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தல், ஜம்மு-காஷ்மீரை மட்டுமல்ல, ஒட்டு மொத்த நாட்டையும் பாதுகாத்திட, நம் மதச் சுதந்திரத்தைப் பாதுகாத்திட நடைபெறும் போராட்டமாகும்.  இந்தத் தேர்தல், இந்தியா, ஒரு மதச்சார்பற்ற இந்தியாவாகத் தொடர வேண்டுமா, இல்லையா என்பதைத் தீர்மானிப்பதற்கான தேர்தலுமாகும். எனவே இதனை மிகஎளிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள். நம்முன் உள்ள தேர் தல் களம், ஒரு மாபெரும் போராட்டக் களமாகும். 2014இல் நடைபெற்ற தேர்தலின்போது மிஸ்டர் மோடி எண்ணற்ற வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்திருந்தார். ஆனால் அவற்றில் ஒன்றைக்கூட அவர் நிறைவேற்றிடவில்லை. அவர்

பொய்களைத் தவிர வேறெதுவுமே சொல்வதில்லை. எண்ணற்ற வாக்குறுதிகளை அள்ளி வீசினார். ஒவ்வோராண் டும் 2 கோடி வேலைகளை உருவாக்குவேன் என்றார். இதன் பொருள் அவர் கடந்த ஐந்தாண்டுகளில் பத்து கோடி வேலைகளை உருவாக்கி இருக்க வேண்டும். எங்கே அந்த வேலைகள்? மிஸ்டர் மோடி அனைத்து முனைகளிலுமே படுதோல்வி அடைந்துள்ளார். இதிலிருந்து மக்கள் கவனத்தைத் திசை திருப்புவதற்காகவே, பாலக்கோட்டில் வான்வழித் தாக்குதல்கள் நடத்தி, நாட்டில் ஒரு போர்க்கால சூழல் இருப்பதுபோலக் காட்டுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்,” இவ்வாறு பரூக் அப் துல்லா பேசினார். பரூக் அப்துல்லா, ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதியில் தேசிய மாநாட்டுக் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.

(ந.நி.) 

;