செவ்வாய், ஆகஸ்ட் 11, 2020

தேசம்

img

கல்கி ஆசிரமத்தில்  ரூ.93 கோடி பணம், தங்கம் பறிமுதல்

சென்னை:
கல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான 40 இடங்களில் வருமானவரித்துறை மேற்கொண்ட அதிரடி சோதனையில், அமெரிக்கடாலர்கள் உள்பட ரூ.93 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கல்கி ஆசிரமம் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வரதைய பாளையத்தில் உள்ளது. கல்கி பகவான் விஜயகுமார் மீது, பக்தர்களுக்கு போதை பொருட்களை கொடுத்ததாகவும், சிறப்பு பூஜை என்ற பெயரில் பண வசூல் வேட்டைநடத்தினார் என்றும் புகார் எழுந்தது.இந்த நிலையில் கல்கி பகவானின் மகன் என்.கே.வி.கிருஷ்ணா நடத்திவரும் தொழில் நிறுவனங்களில் வருமான வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறைக்கு புகார்கள் வந்தன.  இதையடுத்து ஆந்திரா, சென்னை உள்பட நாடு முழுவதும் அந்த ஆசிரமத்துக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 3 நாட்களாக அதிரடி சோதனை நடத்தினர். வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் காட்டப்படாத கோடிக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இதில், இந்திய பணம் ரூ.43.9 கோடி, ரூ.18 கோடி மதிப்பிலான அமெரிக்க டாலர்கள், ரூ.26 கோடி மதிப்பிலான 88கிலோ தங்கம் மற்றும் ரூ. 5 கோடி மதிப்பிலான வைரம்போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட மொத்த பணத்தின் மதிப்பு 93 கோடி ரூபாய் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

;