தேசம்

img

காலத்தை வென்றவர்கள் : இந்திய விஞ்ஞானி ஆச்சாரியா பிரபுல்லா ராய் பிறந்த நாள் ..  ஆகஸ்ட் 2

இந்திய விஞ்ஞானி ஆச்சாரியா பிரபுல்லா 1861 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரண்டாம் தேதி பிறந்தார் .இவர் ஒரு வங்கக் கல்வியாளர், வேதியியலாளர் மற்றும் சமூக சேவையாளர். இவர் ஆயுர்வேத மருந்துகள் பற்றி பல ஆய்வுகள் செய்தவர்.
லண்டனில் அறிவியல் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியர் இவரே. இந்திய வேதியியல் கழகத்தை தொடங்கினார். மேலும் இவர் இந்திய விடுதலைப் போரில் பங்கு கொண்டவர் ஆவார்.

ஆச்சார்யா பிரபுல்லா ராய் பாதரச நைட்ரைட் என்ற அதிக நிலைத்தன்மை கொண்ட சேர்மத்தைக் கண்டுபிடித்தவர். 1989 இல் இருந்து இவர் பெயரில் பி. சி. ரே விருது சிறந்த விஞ்ஞானிகளுக்கு இந்திய அறிவியல் கழகத்தால் வழங்கி சிறப்பிக்கப்படுகிறது. ஆச்சார்யா சந்திர கல்லூரி, ஆச்சாரியா பல் தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவை வங்கதேசத்தில் இன்றும் இவர் பெயரை நினைவு கூருகின்றன.உலக நாடுகள் கொரோனா கொடூரத்தால் அல்லல்பட்டு வரும் இந்நாட்களில் இந்தியாவை அமெரிக்கா வேண்டி நின்ற ஹைட்ராக்ஸி குளோரோயின் மருந்தைக் கண்டுபிடித்த இந்திய விஞ்ஞானி ஆச்சார்யா பிரபல ராய் ஆவார். இவர் 1944ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16ஆம் தேதி மறைந்தார்.

===பெரணமல்லூர் சேகரன்===

;