தேசம்

img

சுதந்திர தின சிறப்பு மலர்

சுதந்திர தின சிறப்பு மலர்

 

1. அவிநாசியில் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு வரவேற்பு கொடுத்து எடுக்கப்பட்ட புகைப்படம் (1941).  முதல் வரிசையில் சின்னச்சாமி, சிரஞ்சீவி, கே.வி.குமாரசாமி, ஆர்.குமாரசாமி, என்.நடேசன், எஸ்.ஏ.தம்பி நாயக்கர், கே.சிதம்பரம், இரண்டாவது வரிசையில் ஏ.வெங்கட்ராமன், சென்னியப்ப கவுண்டர், சாமியப்ப கவுண்டர், எம்.குமாரசாமி, கே.சோமசுந்தரம் செட்டியார், எஸ்.ராமசாமி, கே.எஸ்.சுந்தரம், மூன்றாவது வரிசையில் ஏ.ராஜகோபால், நஞ்சப்ப உடையார், சி.அவிநாசியப்பர் செட்டியார், ராமசாமி, ஆறுமுகம் மற்றும் மணி ஆசாரி தெய்வசிகாமணி பண்டாரம் உள்ளிட்டோர் உள்ளனர். 

2. 1932-ல் கருவலூருக்கு காந்தி அவர்கள் வருகை தந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம்.

3.அலிப்பூர் சிறை கொட்டடியில் அடைக்கப்பட்ட தியாகி சாமி தேவர்

கருவலூர்  ஜீவ காருண்ய சங்கத்தின் நிர்வாகி சிதம்பரத் தேவர் தலைமையில் உப்புச் சத்தியாகி ரகப் போராட்டம்,  வெள்ளையனே வெளியேறு போராட்டம்  ஆகிய போராட்டங்களில் கலந்து கொண் டதற்காக ஆங்கிலேயர் அரசாங்கத்தால் இரண்டு வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டவர் தியாகி சாமி தேவர். இதன்பின் தற்போதைய மேற்கு வங்காள மாநிலம் ஆலப்பூர் சிறையில் அடைக்கப்பட்டு கடுமை யாக சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார். இவரின் உடல் முழுவதும் கம்பிகளால் சூடு வைக்கப்பட் டது. இந்த கடுங்காவல் தண்டனை காலம் முடிந்த பிறகு சொந்த ஊர் திரும்பிய பின்னரும், இந்திய விடுதலைக்கான தனது போராட்டத்தை தொடர்ந் ந்தார். இக்காலகாட்டத்தில் மகாத்மா காந்தி கருவலூர் பகுதிக்கு வந்தபோது சுதந்திரப் போராட்ட செலவுகளுக்காக காந்தியின் அறைகூவலை ஏற்று தனது வெள்ளி  அரணாக்கொடியை உடனடியாக அறுத்துக் கொடுத்தார். நாடு விடுதலை  அடைந்த பிறகு கருவலூர் பகுதியில் கடுமையான  தண்ணீர் பற்றாக்குறை நிலவி வந்த நிலையில், மேட்டுப்பாளையத்தில் இருந்து குழாய் அமைத்து  குடிநீர் தர வேண்டி சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டார். இவரினு போராட்டத்தை தொடர்ந்து  அரசுத்துறை சார்ந்த அதிகாரி அங்கம்மா தேவி மூலம் கருவலூர் பகுதிக்கு குழாய் அமைத்து  குடி தண்ணீர் வழங்கப்பட்டது. இவரின் தியாகத்தை போன்றும் விதத்தில் மத்திய அரசாங்கம் தாமிர பட்டயம்  வழங்கி கௌரவித்துள்ளது.  மேலும் அவிநாசி அரசு மேல்நிலைப் பள்ளியில் தியாகி சாமி தேவரின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது.

4.காந்திய வழியில்  தியாகி ஏ. என். நாச்சிமுத்து தேவர்

1920 ஆம் வருடம் ஜூன் மாதம் 16 ஆம் தேதி கருவலூரில் பிறந்தவர் நாச்சிமுத்து தேவர்.  இவருடைய குடும்பமே சுதந்திரப் போராட்ட தியாகிகள் நிறைந்த குடும்பமாக இருந்து வருகிறது. இவருடைய சித்தப்பாவான கேப்டன் சிங்க தேவர், நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையிலான ஐஎன்ஏ படைப்பிரிவில் இணைய பர்மா சென்று பினாங்கில் பயிற்சி பெற்று சுதந்திரப் போராட்டங்களில் நேதாஜியுடன் பங்கேற்றவர். அதேநேரம், ஏ.என்.நாச்சிமுத்து தேவர்  காந்திய கொள்கையில் ஈர்ப்பு ஏற்பட்டு அதனை  பின்பற்றி கள்ளுக்கடை மறியல், உப்புச் சத்தியா கிரகம், வெள்ளையனே வெளியேறு உள்ளிட்ட போராட்டங்களில் பங்கேற்றார். இதில் வெள்ளை யனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்டதற்காக  இரண்டு வருடம் சிறை தண்டனையை அனுப வித்தார். மேலும்,  ஆந்திரா மாநிலத்தில் சுதந்திரப் போராட் டத்தை தலைமையேற்று நடத்த அனுப்பி வைக்கப் பட்டு அங்குள்ள இளைஞர் மத்தியில் சுதந்திர கன லையும், காந்திய கொள்ளைகளையும் பரப்பினார். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு சென்னையில் காம ராஜர்  ஏ.என். நாச்சிமுத்து தேவருக்கென தாம்பரத் தில் தங்குவதற்கு வீடு ஒதுக்கீடு செய்தார். இதன் படி தனது இறுதிக்காலம் வரை சென்னை,  ஆந்திரா  மாநில மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை யும், சமூக நலப் பணிகளையும் மேற்கொண்டு வந்த  அவர் 1980 ஆம் ஆண்டு மறைந்தார்.

5.தியாகி கே.எஸ்.சுந்தரம்

வெள்ளையனே வெளியேறு இயக்கம் முதல் கள்ளுக்கடை எதிர்ப்புப் போராட்டம் வரை

வெள்ளையனே வெளியேறு இயக்கம் முதல் கள்ளுக்கடை எதிர்ப்புப் போராட்டம் வரை கருவலூர் அருகாமையில் உள்ள காரைக்கா பாளையத்தில் பூர்வீகமாகக் கொண்ட தியாகி கே.எஸ்.சுந்தரம் 1910 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி பிறந்தார். இவர் ஜீவ காருண்ய  சங்கத்தின் நிர்வாகி சிதம்பரத் தேவரின் தலைமை யேற்று. சுதந்திரப்  போராட்டத்தில் தன்னை முழுமை யாக இணைத்துக் கொண்டார். கிராமம், கிராமமாக சென்று நாடகங்களை இயக்கி சுதந்திரப் போராட்ட கனலை விதைத்தவர். வெள்ளையனே  வெளியேறு இயக்கத்தில் பங்கு கொண்டதற்காக இரண்டு வருடசிறை தண்டனையை எதிர்க்கொண்ட வர். மேலும், 1930 ஆம் ஆண்டுகளில் தலைமறைவாக இருந்து சுதந்திரப்  போராட்டத்தில் பங்கேற்ற தியாகி களை காரைக்காபாளையத்திலுள்ள தனது இல்லத் தில் தங்க வைத்து அவர்களை பாதுகாத்த வர். இதேபோல், விடு தலை போராட்ட காலத் தில் ஆங்கிலேய அரசின் அடக்குமுறைகளுக்கு பாடம் கற்பிக்கும் வகையில் கோவை சூலூர் விமான நிலையம் தீ வைக்கப்பட்டது. இதற்கான திட்டம் இவரது இல்லத்திலே திட்டமிடப்பட்டுள்ள தாக கருதப்படுகிறது.  மேலும், கள்ளுக்கடை எதிர்ப்புப் போராட்டத்தில் தியாகி சுந்தரம் அவரது துணைவியார் விசாலாட்சி யுடன் பங்கேற்று சிறை சென்றுள்ளார். நாடு விடுத லைக்கு பின் மத்திய அரசால் வழங்கப்பட தாமரை பட்டய விருதையும், தியாகி பென்சனையும் நிராக ரித்த கே.எஸ்.சுந்தரம் 1979 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் நாள் மறைந்தார்.

6.தியாகி சிதம்பரத் தேவர்

1905 ஆம் வருடம் பிறந்தவர் ஜீவகா ருண்யம் சங்கத்தின் தலைவர், காங்கிரஸ் கட்சியின் முன்னோடி நிர்வாகிகளில் ஒருவர் தியாகி சிதம்பரத் தேவர்.  காமராஜரின் நெருங்கிய நண்பரான இவர் கருவலூர் பகுதி யில் சுதந்திர போராட்டத்திற்காக மக்களை அணி திரட்டி மகத்தான பங்காற்றியவர். மகாத்மா காந்தி தமிழகம் வருகை தந்தபோது இவரது இல் லத்திற்கு வருகை தந்து, அவருடைய மகளுக்கு உமா தேவி என பெயர்சூட்டினார். வெள்ளையனே  வெளியேறு இயக்கம், உப்புச் சத்தியாகிரகம், கள்ளுக்கடை போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றவர். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றதற்காக இரண்டு வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டு  அலிப்பூர் சிறையில் கெடுஞ்சித்தரவதையை அனுபவித்தவர். மேலும், அரிஜன மக்களுக்காக மகாத்மா காந்தி  நிதி திரட்டியபோது தன்னிடமிருந்த வைர நகை களை கொடுத்ததோடு, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு  ஏராளமான  வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளார். நாடு விடுதலை அடைந்த பிறகு தொடர்ந்து சமூகப் பணி யாற்றி வந்துள்ளார். கருவலூர் பகுதி மக்களுக்காக குடிநீர் குழாய்  அமைக்கும் போராட்டத்தில் முன் நின்று குடிநீர் பெற்றுத்தந்தவர். இவரின் தியா கத்தை போன்றி அன்றைய மத்திய அரசு தாமிர பட்டயம் வழங்கி கௌரவித்ததோடு, இவரது நினை வாக அவிநாசி அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது. இவர் கடந்த 1986 ஆம் ஆண்டு மறைந்தார்.

7.தியாகி சுப்பிரமணிய முதலியார்

சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் அவிநாசி  பகுதி மக்களை அணிதிரட்டி பல்வேறு போராட்டங் களை நடத்தியவர் தியாகி சுப்பிரமணிய முதலி யார். உப்புச் சத்தியாகிரகம், வெள்ளையனே வெளி யேறு, கள்ளுக்கடை ஒழிப்பு போன்ற பல்வேறு போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர். இந்திய  விடுதலைக்கு பின்னர் இவரை கௌரவிக்கும்  வகையில் மாநில அரசின் சார்பில் நடுவச்சேரி  அருகில் 6 ஏக்கர் நிலம் இலவசமாக வழங்கப் பட்டது. இருப்பினும்  தனது இறுதிகாலம் வரை வறுமையில் வாடி அவர் மறைந்த நிலையில்,  அவரது இறுதிநிகழ்ச்சியை அரசே ஏற்று  நடத்தியது.

8.ஆங்கிலேயே அரசிற்கு எதிராக ஆவேச முழக்கமிட்ட தியாகி கு.சுப்பிரமணிய தேவர்

1919-ஆம் வருடம் பிறந்தவர் கு. சுப்பிர மணிய தேவர். சிறுவய திலிருந்து சுதந்திரப் போராட்டத்தின் மீது பற்று கொண்டவர். தனது 20  ஆம் வயதில் ஆங்கிலேயே அரசு இந்திய மக்கள்  மீது ஏவிய அடக்குமுறைகளை கண்டு ஆவேச மடைந்த கு.சுப்பிரமணிய தேவர், கருவலூரிலுள்ள கிராம நிர்வாக அலுவலகத்தை இடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அன்றைய ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்ட அவ மூன்று மாத கால சிறை தண்டனைக்கு உட்படுத்தப் பட்டார். அதன்பின்னர் தொடர்ச்சியாக சுதந்திர போராட்ட இயக்கங்களில் பங்கேற்று இந்திய விடு தலைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டனர். 1947-ல் நாடு சுதந்திரம் அடைந்த பின்பு  1959 ஆம் ஆண்டு முதல் அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமூக நலப் பிரிவு அதிகாரியாக பணியை தொடர்ந்தார். 1979ஆம் ஆண்டு அரசு அதிகாரி பணியில் இருந்து ஓய்வு பெற்ற கு.சுப்பிர மணிய தேவர் தொடர்ந்து சமூக விடுதலைக்கான போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். 1994 இல் கல்வி உரிமைக்காக கருவலூர் பகுதியில் மனிதச் சங்கிலி போராட்டத்தை தலைமையேற்று நடத்தினார். இவரை கௌரவப்படுத்தும் விதத்தில் அவிநாசி அரசு மேல்நிலைப் பள்ளியில் சுதந்திரப் போராட்ட தியாகிகள் நினைவுத் தூண் அமைக்கப் பட்டு, அந்தக் கல்வெட்டில் இவரின் பெயர் பதிக்கப் பட்டுள்ளது.

அன்னூரில் மகாத்மா காந்தி

அன்னூர் அருகே உள்ள சொக் கம்பாளையம் கிராமத்தில் இருந்து சீனிவாசராவ், அவருடைய மனைவி சோனாபாய், சின்னையன், பெட்டை யன், மாசிலாமணி ஆகிய ஐந்து பேர்  சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று பல ஆண்டு சிறைவாசம் அனுபவித்தனர். இச்சூழலில் சுதந்திர போராட்ட காலத்தில் கோவைக்கு வருகை தந்த மகாத்மா காந்தியடிகள், அன்னூர்  அருகே உள்ள சொக்கம்பாளை யத்துக்கு 1934ம் ஆண்டு பிப்.6 ஆம் தேதியன்று வந்து சுதந்திர போராட் டத்தில் மக்கள் பங்கேற்க வேண்டி யது குறித்து அங்கு காந்தியடிகள் பேசினார். காந்தியின் வருகையால் சொக்கம்பாளையத்தில் தேசிய சேவா சங்கமும், அதன்கீழ் தேசிய வித்யா  சாலை பள்ளியும் துவங்கி செயல்பட்டு வருகிறது. காந்திக்கு சிலை அமைக் கப்பட்டு, காந்தி பெயரால் அரசு மேல் நிலைப்பள்ளியும் தற்போது வரை இயங்கி வருகிறது.

9.கிராமச் சாவடிக்கு தீ வைத்த தியாகி ராமசாமி தேவர்

1920 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி பிறந்த ராமசாமி தேவர் சிதம்பரத் தேவர் தலைமையில் அரிஜன மக்களுக்காக இரவு நேர பாடசாலையை நடத்தி வந்தார். இதன்பின் 1941 ஆம் ஆண்டு சத்தியாகிரக போராட்டத்தையொட்டி ஓராண்டு காலம் கால்நடை யாக ஒவ்வொரு மாவட்டமாக சென்று சுதந்திர சிந்தனையை  மக்களிடம் பரப்பினார். இதைத்தொடர்ந்து 1943 ஆம் ஆண்டு  சுதந்திரப் போராட்டம் எழுச்சி கொண்டபோது  கருவலூர் கிராம சாவடிக்கு நெருப்பு வைத்ததற்காக காவல்துறையினர் அவரது வீட்டை சூறையாடியதுடன், அவரை தெருவில் அடித்து  தரதரவென இழுத்துச் சென்று கைது செய்தனர். இச்சம்ப வத்திற்காக அவிநாசி சிறைச்சாலையில் 3 மாதம் சிறை தண்டனை அனுபவித்தார்.  இதைத்தொடர்ந்து அவிநாசி காங்கிரஸ் கமிட்டியின் தாலுகா செயலாளர், காதி கிராப்ட் பணி,  சமூக நலப் பிரிவு  அதிகாரி உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தார். வாழ்நாள் முழுவ தும் காந்திய கொள்கையை பின்பற்றிய ராமசாமி தேவர், 1986-ம்  வருடம் அக்டோபர் மாதம் மூன்றாம் தேதி காந்தி பிறந்நாளிலேயே மரணமடைந்தார்.

10.தியாகி சென்னியப்ப கவுண்டர்

அவிநாசி அருகே புதுப்பாளையம் ஊராட்சி கவுண்டம் பாளையத்தில் பிறந்த வர் சென்னியப்ப கவுண் டர். அவிநாசி பகுதியில் நஞ்சப்ப உடையார், சுப்பிரம ணிய முதலியார் ஆகியோருடன் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் மக்களை அணி திரட்டி  கள்ளுக்கடை மறியல், வெள்ளையனே வெளி யேறு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு போராட் டங்களில் பங்கேற்றதற்காக சிறை தண்டனையை அனுபவித்தவர்.

11.தியாகி  கே. ராமசாமி தேவர்

1907 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் தேதி  பிறந்த கே.ராமசாமி தேவர்  கருவலூரில் உள்ள ஜீவ காருண்ய சங்கத்தில் தன்னை இணைத் துக் கொண்டு கோவில்களில் ஆடு, கோழிகளை பலியி டுவதற்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கையை மேற்கொண்டு வந்தார்.  இதன்பின் ஜீவகாருண்ய சங்கம் காங்கிரஸ் கமிட்டி யாக மாற்றப்பட்ட நிலையில் தலைவராக சிதம்பரத் தேவர், செயலாள ராக ராமசாமி தேவர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து மக்களிடம் சுதந்திர எண்ணத்தை பரப்பும் வகையில் ராமசாமி தேவர் நாடகக் கலைஞராக ஒவ்வொரு கிராமம், கிராமமாக சென்று நாடக வடிவில் பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும், கள்ளுக்கடை மறியல், சாராயம் ஒழிப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக காவல்துறை யினர் கெடும் தாக்குதலுக்கு உள்ளாகினார்.  இதேபோல், 1934 ஆம் ஆண்டு காந்தியடிகள் கருவலூர் வந்தபோது  உப்புச் சத்தியாகிரகம் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். இப் போராட்டத்தை கே.ராமசாமி தேவர் கருவலூரில் துவக்கினார். அதன் பின்னர் 1942 இல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட கே. ராமசாமி தேவருக்கு 2 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டு அவிநாசி கிளை சிறையில் அடைக் கப்பட்டார். இதன்பின் நாடு விடுதலைக்கு பின் சமூக நல இயக்கங்களை முன்னேடுத்து நடத்தி கே.ராமசாமி தேவர் 1977 ஆம் ஆண்டு மறைந்தார். இவருடைய பெயர் அவிநாசி அரசு மேல்நிலைப் பள்ளியில் சுதந்திரப் போராட்ட நினைவு தூண்  கல்வெட்டில் பதிக்கப்பட்டுள்ளது.

12.ஆங்கிலேயே அரசிற்கு வரி தர மறுத்த தியாகி நஞ்சப்ப உடையார்

1902 ஆம் ஆண்டு சேவூரில் பிறந்த நஞ்சப்ப உடையார்  தனது இளமை காலத்திலேயே சுதந்திரப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர். கள்ளுக்கடை மறியல், ஒத்துழை யாமை இயக்கம் போன்ற போராட்டங்களில் பங்கேற்று கோவை மத்திய சிறை மற்றும் மைசூர் பெல்லாரி சிறைகளில் கடுஞ்காவல் தண்டனையை அனுபவித்தவர். பெரும் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த இவர் தனது சொத்துக்கள் முழுவதையும் சுதந்திரப் போராட்டத்திற்காக அர்ப்பணித்தவர். அவிநாசி  பகுதி யில் டீக்கடை நடத்தி வந்த நிலையில், வரிகொட இயக்கத்தில் பங்கேற்று ஆங்கிலேயே அரசிற்கு வரி தர மறுத்த காரணத்தால்  அவரது டீக்கடை சீல் வைக்கப்பட்டது.   உப்புச் சத்தியாகிரகப்  போராட்டத்தில் பங்கேற்க சென்ற போது இவருக்கு மகன் பிறந்துள்ளார். அப்போது, போராட்டத்தில் கலந்து கொள்ள செல்கின்றேன். எனது தாய்நாடு விரைவில் சுதந்திரம் அடைந்து விடும் என்ற நம்பிக்கையில், தனது மகனுக்கு சுதந்திரன் என பெயர் சூட்டி போராட்ட களத்திற்கு மீண்டும் சென் றுள்ளார். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு சமூகப்பணிக்காக தன்ணை அர்ப்பணித்துக் கொண்டார். குறிப்பாக, தலித் மக்க ளுக்கு கல்வி கற்று கொடுப்பது, அவர்கள் உரிமைக்காக போராட் டங்களை முன்னேடுத்த நஞ்சப்ப உடையார் 1961 ஆம் ஆண்டு  ஆகஸ்ட் 9 ஆம் தேதியன்று மறைந்தார். இவரது மகன் சுதந்தி ரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிஐடியு தொழிற்சங்கத்தின் முன்னணி நிர்வாகியாக இருந்து தேச முன்னேற்றத்திற்கான அவரது தந்தையின் போராட்டத்தை முன்னேடுத்து சென்றவர்.
 

 


 

;