தேசம்

img

இந்தியா அனைத்து மதத்தவருக்கும் சொந்தம்... சிஏஏவில் முஸ்லிம்களை சேர்க்க வேண்டும்

கொல்கத்தா:
குடியுரிமை திருத்தச் சட்டத்தில் முஸ்லிம்களை ஏன் சேர்க்கக் கூடாது? என்று, மேற்குவங்க மாநில பாஜக துணைத்தலைவர் சந்திரகுமார் போஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் தவறாகப் புரிந்து கொண்டுபோராட்டங்கள் நடைபெறுவதாக, மேற்குவங்க பாஜகவினர் விழிப்புணர்வு பேரணி நடத்திய சில மணி நேரங்களில் சந்திரகுமார்போஸ் இவ்வாறு கேட்டுள்ளார்.“குடியுரிமைத் திருத்தச் சட்டம்- 2019 எந்த ஒரு தனிப்பட்ட மதத்தையும் குறிவைப்பதாக இல்லை என்றால், பின்னர் எதற்காக இந்து, சீக்கியர், பவுத்தர், கிறிஸ்தவர், பார்சி, ஜெயின் என்று பட்டியலிட வேண்டும்? ஏன் அந்தப் பட்டியலில் முஸ்லிம்களையும் சேர்க்கக் கூடாது? வெளிப்படைத் தன்மையுடன் இருக்கலாமே!” என்று சந்திரகுமார் போஸ் அவரது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

மேலும், “இஸ்லாமியர்கள் தங்களது சொந்த நாட்டில் துன்புறுத்தப்படாவிட்டால் அவர்கள் இந்தியாவுக்கு வரமாட்டார்கள். எனவே, அவர்களை குடியுரிமை திருத்தச் சட்டத்தில் சேர்ப்பதில் தவறு ஏதும் இல்லை. பாகிஸ் தான், ஆப்கானிஸ்தானில் வசிக்கும் பலூச் மக்களின் நிலை? பாகிஸ்தானில் உள்ள அஹ்வுதியா முஸ்லிம்களின் நிலை தெரியாத ஒன்றா?” என்றும் அவர் கேள்விஎழுப்பியுள்ளார்.மற்றொரு டுவீட்டில், “இந்தியாவை வேறு எந்த ஒரு தேசத் தோடும் ஒப்பிடவும் வேண்டாம், சமன்படுத்தவும் வேண்டாம். ஏனென்றால் இத்தேசம் எல்லாமதத்தினருக்கும் சமூகத்தினருக்குமானது” என்றும் பதிவிட்டுள்ளார்.சந்திரகுமார் போஸ், நேதாஜிசுபாஷ் சந்திரபோஸின் கொள்ளுப்பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.

;