தேசம்

img

கொரோனா பாதிப்பு: இந்தியாவில் 1637 பேராக அதிகரிப்பு

புதுதில்லி, ஏப்.1- கொரோனா வைரஸ்  நாளுக்கு நாள் பாதிப்பை அதிகரித்து வருகிறது. இந்தியா வில் தற்போதைய நிலவரப்படி, கொரோனா வால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1637 பேராக அதிகரித்துள்ளது. 

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில், ‘இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண் ணிக்கை 1,637 பேராக அதிகரித்துள்ளது. இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளனர். 132 பேர் குணமடைந்து வீட்டிற்குத் திரும்பி யுள்ளனர். கடந்த 3 நாட்களில் மட்டும் 400-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மகாராஷ்டிரத்தில் அதிகபட்சமாக 302 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து கேரளத்தில் 241 பேர், தமிழ கத்தில் 124 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

;