செவ்வாய், ஆகஸ்ட் 11, 2020

தேசம்

img

முட்டை, ஆரஞ்சு, தோசை, டோஸ்டட் பிரட், சீஸ்.... கேரள அரசு மருத்துவமனை தனிமை வார்டு மெனு

கொச்சி:
கோவிட்-19 அறிகுறியுடன் எர்ணாகுளம் களமசேரி மருத்துவக் கல்லூரி தனிமை வார்டில் கண்காணிப்பில் உள்ளவர்களுக்கு தரமான சிறந்த உணவு வழங்கப்படுகிறது. கண்காணிப்பில் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் உணவுப் பட்டியலை மாவட்ட தகவல் தொடர்பு அலுவலர் வெளியிட்டார். மலையாளிகளுக்கும், வெளிநாட்டினருக்கும் தனித்தனி உணவுப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மலையாளிகளுக்கு தோசை, சாம்பார், இரண்டு முட்டைகள், இரண்டு ஆரஞ்சு பழம், தேநீர், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் ஆகியவை முக்கிய உணவாக வழங்கப்படுகின்றன. காலை ஏழரை மணிக்கு காலை உணவும், பத்தரை மணிக்கு பழச்சாறும் வழங்கப்படுகிறது. வெளிநாட்டினருக்கு சூப்பும், பழங்களும் கொண்ட முக்கிய காலை உணவும், வேகவைத்த இரண்டு முட்டைகளும், 11 மணிக்கு அன்னாசிப் பழச்சாறும் வழங்கப்படுகிறது. 

மதியம் 12 மணிக்கு சப்பாத்தி, சோறு, மீன் வறுத்தது, பொரியல், தயிர், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் ஆகியவை மலையாளிகளுக்கும், டோஸ்டட் பிரட், சீஸ், பழ வகைகள் வெளிநாட்டினருக்கும் வழங்கப்படுகிறது. மாலையில் தேநீருடன் தின்பண்டமும் மலையாளிகளுக்கு வழங்கப்படுகிறது. வெளிநாட்டினருக்கு பழச்சாறு வழங்கப்படுகிறது. இரவு ஆப்பமும் காய்கறி குழம்பும் இரண்டு நேந்திரன் பழமும் மலையாளிகளின் உணவு. வெளிநாட்டினருக்கு டோஸ்ட்டட் பிரட், துருவிய முட்டை, பழங்கள் வழங்கப்படும். குழந்தைகளுக்கு பால் வழங்கப்படும். இங்கு வழங்கப்படும் உணவுகளை பாராட்டி ஏராளமானோர் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர். 

;