தேசம்

img

குஜராத்தில் எரிந்து கொண்டிருக்கும் ஈரான் நெருப்பு.


1000 ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய பாரசீகம் என்று அழைக்கப்பட்ட இன்றைய ஈரான் பகுதியிலிருந்து, மங்கோலிய செங்கிஸ்கான் படையெடுப்பால் பாதிக்கப்பட்ட பல குழுக்கள், பல திசைகளில் பயணமாயின.

அப்படி பயணமான ஒரு குழு குஜராத்தின் அன்றைய மன்னன் ஜாதவ் ராணாவிடம் குடியுரிமை கேட்டது. அவன் இங்கு குடியிருக்க இயலாது என மறுத்தான். அந்தக் குழுவின் தலைவனுக்கு பால் அனுப்பி, நாங்கள் பால் போன்றவர்கள் இதில் உங்களால் எப்படி இணைய முடியும் என்றானாம் மன்னன். பாரசீகத்திலிருந்து வந்த அந்தக் குழுவின் தலைவனோ, பாலில் சிறிது சர்க்கரையை சேர்த்து, இப்படி இணையலாமே என்றானாம்.

குஜராத்தில் அந்தக் குழுவினர் வந்து தங்கிவிட்டனர். இன்றளவும் அவர்கள் தங்களை இந்தியர் என்று அழைத்துக் கொள்வதில்லை. பாரசீகத்திலிருந்து வந்ததால் பார்சிகள் என்றே அறியப்படுகின்றனர். ஜொராஷ்டிரம் அவர்கள் மதம். அவர்களின் வேதநூல் அவெஸ்தா.

வெப்ப மண்டலப் பிரதேசத்தில் வாழ்ந்த மனிதர்களுக்கு நீரின் முக்கியத்துவம் தெரியும். நீரைப் போற்றுவார்கள். குளிர் பிரதேசத்தில் வாழ்பவர்கள் நெருப்பைப் போற்றுவார்கள். பார்சிகளின் வழிபாடு நெருப்போடு தொடர்புடையது.

நெருப்பையே வழிபடுவார்கள். ஈரானிலிருந்து எடுத்து வந்த நெருப்பை வைத்து, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தில் உட்வாடா பகுதியில் குடியேறிய பார்சிகள் நெருப்புக் கோவில் ஒன்றைக் கட்டினார்கள். அந்த நெருப்பு இன்று வரை எரிந்து கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் 1795 ல் பார்சியின் ஒரு சிறு கூட்டம் ராயபுரத்தில் குடியேறியது. அங்கும் ஒரு நெருப்புக் கோவில் கட்டினார்கள். இன்று வரை அந்தக் கோவிலிலும் ஈரானிய நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது. இந்தியா முழுவதிலும் 1,50,000 பேர் வாழ்கிறார்கள். சென்னையில் 300 குடும்பங்கள் இருக்கிறது.

1885 ல் காங்கிரஸ் கட்சியை உருவாக்கிய தாதாபாய் நௌரோஜி முதல் தொழிலதிபர்கள் டாட்டா, வாடியா, கோத்ரெஜ் வரை பார்சிகள் தான். இந்திராவின் கணவர் பெரோஸ் காந்தியும் பார்சி தான். இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர்கள் பார்சிகள் தான். பார்சிகளின் மாத வருமானம் 90,000 ரூபாய்க்கு குறைவாக இருந்தால் அவர் அந்த சமூகத்தில் ஏழை என்று அறிவிக்கப்பட்டு உதவி செய்யப்படுவார்.

இப்போது கேள்வி என்னவென்றால்
இந்தியாவில் பிறந்து இஸ்லாத்தை வழிபாடாக ஏற்றதால் குடியுரிமையை இழக்க வேண்டுமென்றால்,
ஈரானின் வழிபாட்டு முறையை,
குஜராத்தில் ஈரானிய நெருப்பை இன்றுவரை எரிய வைத்துள்ள பார்சிகளை பாசிச பாஜக எவ்வாறு மதிப்பிடும்?

இந்தியா எங்கள் தாய் நாடு.
இஸ்லாம் எங்கள் வழிபாடு என்கிறார்கள்.
இந்தியா எங்கள் தொழில்நாடு
ஈரான் எங்கள் வழிபாடு என்று சொல்லும் பார்சிகளை இவர்கள்
என்ன சொல்வார்கள்?

இந்தியாவில் எரியும் ஈரானிய நெருப்பை உங்களால் அணைக்க முடியுமா?

மதம் வேறு
அதிகாரமும்,ஆட்சியும் வேறு.
மதங்களின் பெயரால் நாட்டை பிளக்காதே.

படம். சென்னை இராயபுரத்தில் ஈரானிய நெருப்பு இன்றும் எரிந்து கொண்டிருக்கும் பார்சி கோவில்.

Surya Xavier 

;