தேசம்

img

மதநல்லிணக்கத்தின் அடையாளமான அசோக்கும் அன்சாரியும்

அகமதாபாத்:
அசோக் பார்மர், அகமதாபாத்நகரில் செருப்பு தைக்கும் தொழிலாளி. கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை முஸ்லிம்களுக்கு எதிராக எவ்வாறு சங்பரிவார் அமைப்பினர் திட்டமிட்டு பயன்படுத்தினர் என்பதற்கு அசோக் பார்மரே சாட்சி.அந்த சம்பவத்துக்கு பிறகு கைதுசெய்யப்பட்டு 14 நாட்கள் சிறையில் இருந்தார் அசோக். குஜராத்தில் நடந்த மற்ற வழக்குகளைப்போலவே போதிய சாட்சியங்கள் இல்லை என்கிற காரணத்துக்காக இந்த வழக்கும் தள்ளுபடியானது. 

குஜராத் வன்முறையாளர் களில் ஒருவராக இருந்த அசோக் பார்மர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ‘ஏக்தா சப்பல் ஹர்’ என்கிற பெயரில் காலணி கடைதிறந்தார். கடையை திறந்து வைத்தவர் தன்னிடம் உயிர்ப்பிச்சை கேட்டு கைகூப்பி நின்ற குத்புதீன் அன்சாரி. இப்போதுகலவரத்தையும் இனப்படு கொலைகளையும் வெறுக்கும் அசோக் பார்மர் மத நல்லிணக்கத்திற்கு முன்கை எடுத்து வருகிறார். 2014ல் அசோக்கையும் அன்சாரியையும் இந்த பாதைக்கு கொண்டுவந்தவர் சிபிஎம் ஊழியர்கலீம் சித்திக். அசோக் ஒரு செருப்புக்கடை தொடங்கவும் சிபிஎம் உதவி செய்ததாக சித்திக்கூறுகிறார். அசோக்கும் அன்சாரி யும் இணைந்து நாடாளுமன்ற தேர்தலின்போது கேரள மாநிலம் வடகரா தொகுதியில் சிபிஎம் வேட்பாளர் பி.ஜெயராஜனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கவும் வந்திருந்தனர்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்கள் குஜராத்தில் படுகொலை செய்யப்பட்ட கொடிய சம்பவத்தை தொடர்ந்து சில ஆண்டுகள் அன்சாரியும் அவரது மனைவி மக்களும் குஜராத் பக்கமே வரவில்லை. கடந்த சிலஆண்டுகளுக்கு முன்பு திரும்பி வந்த அன்சாரி குடும்பம் தற்போது தையல் கடை நடத்தி வருகிறது. அசோக் பார்மர், செருப்புக்கடை திறந்து ஒரு தொழிலில் ஈடுபட்டிருப்பது அன்சாரி குடும்பத்தை மிகுந்த மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.அசோக் பார்மர் கூறுகையில், “வன்முறைகளின் நகரமாக இருந்த அகமதாபாத் இனி இந்து- முஸ்லிம் ஒற்றுமையை பறைசாற்ற வேண்டும் என விரும்புகிறேன். அதற்காக அனைவரும் ஒன்றுபட வேண்டும்” என்றார். 

;