தேசம்

img

மோடி, அமித்ஷாவின் ‘திரிசூலம்’ ஒருநாள் அவர்களையே தாக்கும்!

கவுகாத்தி:
பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர், எதிர்க்கட்சி களுக்கு எதிராகத் தூக்கும் ‘திரிசூலம்’ ஒருநாள் அவர்களையே தாக்கும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.அசாம் மாநிலம் கவுகாத்தியில் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:மோடியும், அமித்ஷாவும் மும்முனை கொண்ட ‘திரிசூலத்தை’ கொண்டு எதிர்க்கட்சியை தாக்குகின்றனர். சிபிஐ, அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை- ஆகியஇவைதான் அந்த புதிய திரிசூலம். அரசியல்எதிரிகளை பழிவாங்கவும், தங்கள் அரசியல்லாபத்துக்காக காய்நகர்த்தவும் இது போன்ற அரசு அமைப்புகளை அவர்கள் தவறாக பயன்படுத்துகின்றனர்.மத்திய அரசையும், பாஜகவையும் கடுமையாக விமர்சிப்பவர்களுக்கு அவர்கள்நெருக்கடி கொடுக்கின்றனர். எதிர்ப்பவர்களை நெருக்கடி மூலம் தனிமைப்படுத்துகின்றனர். இதுபோன்ற அரசியல் பழிவாங்கும் போக்கை அவர்கள் கைவிடவேண்டும். இல்லாவிட்டால், அவர்களையும் ஒரு நாள் அந்த திரிசூலமே தாக்கும்.இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

;