தேசம்

img

கன்னியாகுமரியில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த நபர் உயிரிழப்பு

கன்னியாகுமரி
தமிழ்நாட்டின் தென் எல்லை மாவட்டமான கன்னியாகுமரியின் கோடிமுனை பகுதியைச் சேர்ந்த 40 வயதான நபர் ஒருவர் கடந்த 3-ஆம் தேதி குவைத் நாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பினார். கொரோனா அறிகுறி இருந்ததால் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் இருந்தார். அவரது சளி, இரத்த மாதிரிகள் நெல்லை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், வியாழனன்று காலை திடீரென உயிரிழந்தார்.   

உயிரிழந்த நபருக்கு ஏற்கனவே மூளைக்காய்ச்சல் மற்றும் கல்லீரல் பாதிப்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. எனினும் நெல்லை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள சளி, இரத்த மாதிரிகளின் பரிசோதனை முடிவுகள் வெளிவந்த பின்னரே அவர் எப்படி உயிரிழந்தார் என்பது தெரியவரும். 

 

;