திங்கள், ஆகஸ்ட் 3, 2020

தேசம்

img

ஒருவரிச் செய்திகள்....

ஏர்டெல், வோடபோன்,ஐடியாவின் பிரிமீயம் திட்டங்களுக்கு மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான டிராய் தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் டெல்டா பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சிபிஎஸ்இ  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (புதன்கிழமை) வெளியாகும் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக குரல் எழுப்பி வரும் துணை முதல்வர் சச்சின் பைலட் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் மீது காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுக்கக்கோரி அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

;