தேசம்

img

புதிய மோட்டார் வாகன சட்டத்தின் எதிரொலி: மகனை வீட்டிலேயே பூட்டி வைத்த தந்தை

புதிய மோட்டார் வாகன சட்டத்தின் எதிரொலியாக தந்தையே மகனை வீட்டில் பூட்டி வைத்த சம்பவம் நடந்துள்ளது.

மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்தில், வாகன ஓட்டிகள் விதிகளை மீறினால் கடுமையான அபராதம் விதிக்கும் வகையில் சட்ட திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டம் கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்நிலையில், புதிய போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டுள்ள கடுமையான அபராதம் காரணமாக, ஆக்ராவை சேர்ந்த ஜலாம் சிங் என்பவர் தனது மகனை, வீட்டிலேயே பூட்டி வைத்த சம்பவம் நடந்துள்ளது. இதையடுத்து, ஆக்ராவில் உள்ள இட்மத்-உத்-துளக் காவல் நிலையத்தில் இவரது மகன் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.  அதன் பின்னரே ஜலாமின் மகன் பூட்டிய அறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

இது குறித்து ஜலாம் சிங்கிடம் கேட்டபோது, ”புதிய மோட்டார் வாகன சட்டம் அமல்படுத்திய பின்னர், அபராதத் தொகை கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் என் மகனை வாகனத்தை வெளியே எடுத்து செல்ல நான் அனுமதிக்கவில்லை. ஆனால் நான் கூறியதை என் மகன் கேட்காததால் அவரை வீட்டிலேயே பூட்டி வைத்தேன்” என்று கூறினார். 
 
 

;