தேசம்

img

ஆக்கிரமிப்பு காஷ்மீரை இணைக்க பிரார்த்தனை...

உதம்பூர்:
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும், இந்தியாவுடன் இணைவதற்கு பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று, மத்திய பாஜக அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். உதம்பூரில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் இதுதொடர்பாக அவர் மேலும் பேசியிருப்பதாவது:
காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை சிறப்பானது. இதையொட்டி, அரசியல் கட்சித்தலைவர்கள் பலர், காஷ்மீரில் அமைதியைச் சீர்குலைக்க நினைத்தனர். அப்படி நினைத்தவர்களைத் தான் மோடி அரசு வீட்டுக்காவலில் வைத்துள்ளது.நடவடிக்கை இதோடு நிற்கக் கூடாது. அடுத்ததாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதை நோக்கி நகர வேண்டும். அது வெற்றிகரமாக நடக்க வேண்டும் என்று மக்களும் பிரார்த்தனைசெய்ய வேண்டும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்து தடையில்லாமல் செல்லும் நாள் மிக அருகில் உள்ளது என்று நம்புங்கள்.இவ்வாறு ஜிகேந்திர சிங் கூறியுள்ளார்.

;