தேசம்

img

மும்பையில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்து 19 பேர் பலி

மும்பையில் கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் 18 போ் பலியாகி உள்ளனர். 

மகாராஷ்டிர மாநிலம் மும்பை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், மும்பையின் மலாடா கிழக்கு பகுதியான பிம்பிரிடாவில் சுவர் இடிந்து விழுந்து 19 போ் பலியாகி உள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

கனமழை காரணமாக தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. குறிப்பாக மும்பையில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளது. சாலைகள் மற்றும் ரெயில் தண்டவாளங்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி, வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. விமான போக்குவரத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மேலும் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 

;