தேசம்

img

உலக அளவில் முதல் 300 இடங்களில் ஒரு இந்திய பல்கலை கூட இல்லை

உலக அளவில் தலைசிறந்த முதல் 300 இடங்களில் ஒரு இந்திய பல்கலைக்கழகம் கூட இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
உயர்கல்வி தொடர்பான அமைப்பு, டைம்ஸ் உயர்கல்வி நிறுவனங்கள் உலக தரவரிசை 2020 என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது இந்த பட்டியலில் உலக நாடுகளில் உலக நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள் குறித்து தரவரிசை செய்யப்படுகின்றன. 
இதில் உலகளவில் முதல் இடத்தை நான்காவது ஆண்டாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தக்கவைத்துள்ளது. இரண்டாவது இடத்தில் கலிபோர்னியா பல்கலைக்கழகம் உள்ளது. இந்திய பல்கலைக்கழகங்கள் எதுவும் முதல் 300 இடங்களில் வரவில்லை என்றாலும் மொத்தமாக இந்தப்பட்டியலில் உள்ள இந்திய பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதாவது இந்தப்பட்டியலில் 2018 ஆம் ஆண்டு 49 இந்திய பல்கலைக்கழகங்கள் இடம்பெற்று இருந்தது. இந்தாண்டு 56ஆக உயர்ந்துள்ளது.
ஐஐஎஸ்சி பெங்களூர் மற்றும் ஐஐடிரோபர் ஆகிய இரண்டும் 301 - 350 ஆகிய இடங்களுக்குள் இடம் பெற்றுள்ளன.
கடந்த ஆண்டு ஐஐஎஸ்சி பல்கலைக்கழகம் 251-300இடங்கள் என்ற பிரிவில் இடம் பெற்று இருந்தது. ஆனால் இந்தாண்டுபட்டியலில் இந்தப் பல்கலைக்கழகம் சரிவை சந்தித்துள்ளது. 
 

;