தேசம்

img

தில்லியில் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது கிருமி நாசினி தெளித்த மாநகராட்சி ஊழியர்கள்

தில்லியில் கோவிட்-19 பரிசோதனைக்காக காத்திருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மீது மாநகராட்சி ஊழியர்கள் கிருமி நாசி தெளித்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

தில்லியில் உள்ள நூற்றுக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள், சிறப்பு ரயிலில் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு முன்பு கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்வதற்காக லஜ்பத் நகரில் உள்ள பள்ளிக்கு வெளியே காத்திருந்தனர். அப்போது புலம்பெயர் தொழிலாளர்கள் மீது மாநகராட்சி ஊழியர்கள் கிருமி நாசி தெளித்துள்ளனர். இந்த சம்பவம் பெறும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து தில்லி மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் அந்த இயந்திரத்தின் அழுத்தத்தை கையாள முடியாமல் தவறுதலாக தொழிலாளர்கள் பக்கம் திரும்பியது என்றும், இதற்காக மாநகராட்சி அதிகாரிகள் புலம்பெயர் தொழிலாளர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;