தேசம்

img

நடிகர் ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

நடிகர் ரஜினி  காந்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை மத்தியஅரசு அறிவித்துள்ளது. 
இந்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் மற்றும் எண்டா்டெயின்மென்ட் சொசைட்டி ஆஃப் கோவா அமைப்பு இணைந்து, ஆண்டுதோறும் கோவா திரைப்பட விழாவை நடத்தி வருகிறது. வரும் நவம்பா் 20-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை கோவாவில் நடக்கவுள்ள இந்த விழாவிற்கு, இது 50-ஆவது ஆண்டு என்கிற சிறப்பு அம்சமும் உள்ளது. வழக்கமாக 10 நாள்கள் நடைபெறும் கோவா திரைப்பட விழாவில் சுமார் 200 படங்கள் திரையிடப்படும். இது 50-ஆவது ஆண்டு விழா என்பதால், சுமார் 300 படங்கள் திரையிடப்படுகின்றன. 

இந்த விழாவில், நடிகர் ரஜினிகாந்த்திற்கு சிறப்பு நட்சத்திரத்திற்கான (Icon of Golden Jubliee )  விருது வழங்கப்படும் என்று மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.  பிரெஞ்சு நடிகை இஸ்பெல்லே ஹூயுபெர்டிக்கு  வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார். 
இதையடுத்து விருதை வழங்கும் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் வெளியிட்டுள்ளார் ரஜினி. கோவா சர்வதேசத் திரைப்பட விழாவில் தன்னைக் கெளரவப்படுத்துவதற்காக இந்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.   
 

;