தேசம்

img

இந்தியா என்பது இந்து ராஷ்டிரம்தானாம்

புதுதில்லி:
100 கோடி இந்துக்கள் வாழும் இந்தியா என்பது இந்து ராஷ்டிரம்தான் என்று போஜ்புரி நடிகரும் பாஜக எம்.பி.யுமான ரவி கிஷன் பேசியிருப்பது சர்ச்சையாகி இருக்கிறது.பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்த இந்துக்கள், முஸ்லிம்அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க வகைசெய்யும் குடியுரிமை சட்ட திருத்தமசோதா குறித்து, ரவி கிஷன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போதுதான் இவ்வாறு கூறியுள்ளார்.இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் ஏராளமான நாடுகள் இருக்கின்றன. இதே போல உலகில் ஒவ்வொரு மதத்தினருக்கும் தனி நாடுகள் இருக் கின்றன. அப்படியிருக்கும்போது, இந்துக்களுக்கு ஒரு நாடு இருக்கக் கூடாதா? என்று கேள்விஎழுப்பியுள்ளார்.இந்தியாவில் 100 கோடி இந்துக்கள் வசிக்கின்றனர். எனவே, இந்தியா என்பது இந்து நாடுதான் என்று கூறியுள்ள ரவி கிஷன், “இந்துக்கள், தமதுகலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பாதுகாக்க இந்தியாவை இனி ‘பாரத்’ என்றே அழைக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

;