தேசம்

img

கோவிட்-19: இந்தியாவில் 14 ஆயிரத்தை கடந்த உயிரிழப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்தை கடந்துள்ளது.

உலகம் முழுவதும் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 91,92,751 ஆக உயர்ந்துள்ளது. அதே போல், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,74,445 ஆக உயர்ந்துள்ளது. நோய் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 49,39,422 ஆக உள்ளது. இந்த நிலையில், மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,40,215 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிய உச்சமாக 14,933 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 312 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் நாட்டில் மொத்தமாக கோவிட்-19 வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,011 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 2,48,190 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 1,78,014 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் பரவலாக கோவிட்-19 தாக்கம் இருந்தாலும், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, தில்லி, குஜராத் ஆகிய மாநிலங்களில் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் 1,35,796 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 6,283 பேர் உயிரிழந்துள்ளனர். இதை தொடர்ந்து, தில்லியில், 62,655 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2,233 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 62,087 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 794 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத் மாநிலத்தில் 27,825 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,684 பேர் உயிரிழந்துள்ளனர்.
 

;