தேசம்

img

பாஜக ஆளும் கர்நாடகாவில் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் திடீர் ராஜினாமா

பாஜக ஆளும் கர்நாடக மாநிலத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கர்நாடக மாநிலம், தக்‌ஷினா கன்னட மாவட்டத்தின் துணை ஆணையரும், ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான சசிகாந்த் செந்தில், ஜனநாயகம் சமரசம் செய்யப்படுவதாக கூறி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தில், ”ஜனநாயகத்தின் அடிப்படை கட்டுமானம் ஆட்டங்கண்டுள்ள நிலையிலும், சமரசம் செய்யப்படுகின்றது. இந்நிலையில், நான் அரசு ஊழியராக தொடர்வது நியாயமற்றது. மேலும் வரும் நாட்களில், நாட்டின் அடிப்படை தன்மையை சிதைக்கும் வகையில் பல்வேறு கடினமான சவால்களை சந்திக்க நேரிடும். எனவே நான் இந்த முடிவை எடுத்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தான 370 பிரிவை பாஜக அரசு ரத்து செய்ததை அடுத்து, கடந்த 21-ஆம் தேதி கேரளாவை சேர்ந்த கண்ணன் கோபிநாதன் என்கிற ஐ.ஏ.எஸ் அதிகாரி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் லட்சக் கணக்கான மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்படுவதைக் கண்டித்து தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

;