தேசம்

img

மே 25 முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்படும்

இந்தியாவில், உள்நாட்டு விமான சேவை மே 25-ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் புரி தெரிவித்துள்ளது.

கோவிட்19 பரவல் காரணமாக கடந்த மார்ச் 24-ஆம் தேதி முதல், நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்த ஊரடங்கை 4வது முறையாக மே 31-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்தது. இந்த நிலையில்,  உள்நாட்டு விமான சேவை மே 25-ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் புரி தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக அனைத்து விமான நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. பயணத்தின்போது கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகவுள்ளது. 
 

;