தேசம்

img

மதவெறியரை மனிதராக்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி!

கடந்த 2002 குஜராத் கலவரத்தில், ஆயிரக்கணக்கான சிறுபான்மை சமூக மக்கள், ஒரு ரத்த வெறி பிடித்த வன்முறை கும்பலால் கொடூரமாக வேட்டையாடப்பட்டனர். இந்த கொடூரங்கள் தொடர்பாக வெளியிடப்பட்ட புகைப்படங்கள் நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதில், கை கூப்பி கண்ணீர் விட்டு அழும் அந்த புகைப்படம் குதுபுதீன் அன்சாரி எனும் ஏழை தையல் தொழிலாளியின் புகைப்படமாகும். அதேபோல், கலவரக்காரர்களின் இரக்கமற்ற செயலை வெளிச்சப்படுத்தும் மற்றொரு புகைப்படம், சங் பரிவார் அமைப்பை சேர்ந்த அசோக் பார்மர் என்பவர் தலையில் காவி துணியுடன் கையில் இரும்புத்தடியோடி கொலை வெறியுடன் போஸ் கொடுக்கும் புகைப்படமாகும்.

உதவி கேட்டு கதறிய குத்புதீன் அன்சாரி மற்றும் கொலை வெறி கொண்டு திரிந்த மத பயங்கரவாத சிந்தையுடன் அலைந்த அசோக் பார்மர் ஆகிய இருவரையும் முதன் முறையாக கடந்த 2012-ஆம் ஆண்டும் மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த கலீம் சித்திக் என்பவர், கேரளாவில் நடைபெற்ற கூட்டத்துக்கு அழைத்து சென்றார். அதன் பிறகு இருவரையும் பல நிகழ்வுகளுக்கு அழைத்தார். இதைத் தொடர்ந்து,  கடந்த 2014-ஆம் ஆண்டு மத நல்லிணக்க நிகழ்வு ஒன்று நடந்தது. அதில் மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த பி.ஜெயராஜன் ஏற்பாடு செய்த கருத்தரங்கில், பார்மர் பகிரங்க மன்னிப்பு கேட்டார். கலவரத்தால் பாதிக்கப்பட்ட குதுபுதீன் அன்சாரியின் வழக்கை போராட்டத்தை அறிந்த பிறகு, அவரிடமும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். 

தற்போது, அன்சாரி தையல் தொழிலை நடத்தி வருகிறார். அதே போல், கடந்த 25 ஆண்டுகளாக தில்லி தர்வாசா அருகே காலணிகளை தைக்கும் தொழில் செய்து வந்த அசோக் பார்மருக்கு, தொழில் தொடங்குவதற்காக மார்க்ஸிட் கட்சி சார்பில் கொஞ்சம் நிதி வழங்கப்பட்டது. இந்நிலையில், கடந்த வெள்ளி கிழமை அன்று, பார்மர் ”ஏக்தா சப்பல் கார்” என்ற காலணி கடை ஒன்றை தொடங்கி உள்ளார். இதனை குத்புதீன் அன்சாரி திறந்து வைத்தார்.
 

;