தேசம்

img

கோவிட்-19: இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,12,359 ஆக உயர்வு

இந்தியாவில் கோவிட்-19 வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,12,359 ஆக உயர்ந்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் மொத்தம் 1,12,359 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 3435 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,609 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 132 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதுவரை நோய் தொற்றில் இருந்து 45,300 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் அதிகபட்சமாக  மகாராஷ்டிராவில் 39,297 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 1390 பேர் உயிரிழந்துள்ளனர். இதை தொடர்ந்து தமிழகத்தில் 13,191 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 87 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத்தில் 12,537 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 749 பேர் உயிரிழந்துள்ளனர். தில்லியில் 11,088 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 176 பேர் உயிரிழந்துள்ளனர்.
 

;