தேசம்

img

கொரோனா அச்சுறுத்தல் : நாட்டின் 75 மாவட்டங்களின் எல்லைகள் மூட முடிவு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வரும் மார்ச் 31 வரை, நாட்டில் உள்ள 75 மாவட்டங்களின் எல்லைகள் மூட மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து முடிவெடுத்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை சுய ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நிலவரப்படி, கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 347 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வரும் மார்ச் 31 வரை, நாட்டில் உள்ள 75 மாவட்டங்களின் எல்லைகள் மூடவும், மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து சேவையும் நிறுத்தவும் மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து முடிவெடுத்துள்ளது.

;