தேசம்

img

கொரோனா வைரஸ்: இந்தியாவில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் 180க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி உள்ளது. இந்த நோய் தொற்று காரணமாக உலகளவில் பலி எண்ணிக்கை 13,069 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,08,595 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 347 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 307 பேர் இந்தியர்கள் மற்றும் 41 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல், கொரோனா பாதிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் நேற்று இரவு 63 வயது முதியவர் ஒருவர் வைரஸ் பாதிப்பில் மரணமடைந்தார். இன்று பீகார் மாநிலத்தின் பாட்னாவை சேர்ந்த 38 வயதுடைய நபர் ஒருவர், சிறுநீரக கோளாறு காரணமாக மரணமடைந்துள்ளார். இவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது உறுதியாகி உள்ளது. மேலும், குஜராத்தை சேர்ந்த 65 வயதுடைய முதியவர் ஒருவரும் கொரோனா பாதிப்பால் மரணமடைந்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகபட்சமாக 74 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் 52 பேரும், தில்லியில் 27 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 25 பேரும், ராஜஸ்தானில் 24 பேரும், அரியானாவில் 22 பேரும், தெலுங்கானா மற்றும் கர்நாடகாவில் தலா 21 பேரும், பஞ்சாப் மற்றும் குஜராத்தில் தலா 14 பேரும், லடாக்கில் 13 பேரும், தமிழகத்தில் 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

;