தேசம்

img

கொரோனா வைரஸ்: இந்தியாவில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் 130க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது. இந்த வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் 9,841 பேர் உயிரிழந்துள்ளனர். 2,34,034 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக இத்தாலியில் 3,405 பேர் பலியாகி உள்ளனர். சீனாவில் 3,248 பேர் பலியாகி உள்ளனர். ஈரானில் 1,284 பேர் பலியாகி உள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரசால் இதுவரை 206 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய் தொற்று காரணமாக கர்நாடகத்தில் ஒருவரும், தில்லியில் ஒருவரும், மகாராஷ்டிராவில் ஒருவரும், பஞ்சாப் மாநிலத்தில் ஒருவரும் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் ஜெய்ப்பூரில், இத்தாலியை சேர்ந்த ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். இந்த நிலையில், இந்தியாவில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

;