தேசம்

img

ஜூலை 1 முதல் சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் தொடக்கம்

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூலை 1-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 தொற்று காரணமாக  நாடு முழுவதும்  ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன.
இந்த நிலையில், ஜூலை மாதம் தேர்வுகளை நடத்த மத்திய மனிதவள மேம்பாடு அமைச்சம் அறிவுறுத்தியிருந்தது. இந்த நிலையில், சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கான தேர்வுகள் அட்டவணை இன்று வெளியிடப்பட்டது.

அதன்படி, சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் ஜூலை 1 முதல் 15 ஆம் தேதி வரை (காலை 10.30 மணி முதல் 1.30 மணி வரை) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுத்த வரும் மாணவர்கள் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும், தேர்வு அறைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

;