தேசம்

img

பெண் போலீஸ் அதிகாரிக்கு எதிராக தகாத வார்த்தை பயன்படுத்திய பாஜக எம்.எல்.ஏ கைது

மகாராஷ்டிராவில் பாஜக எம்.எல்.ஏ ஒருவர் பெண் போலீஸ் அதிகாரிக்கு எதிராக தகாத வார்த்தைகள் பயன்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டார்.

மகாராஷ்டிராவின் தும்சர் தொகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. சரண் வாக்மரே, கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி அன்று, தொழிலாளர்களுக்கு கட்டுமான கருவிகளை விநியோகிப்பதற்காக விழா நடைபெற்றது. அப்போது, சரண் வாக்மரே, பணியில் இருந்த பெண் போலீஸ் அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, பெண் அதிகாரிக்கு எதிராக தகாத வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளார். இந்நிலையில், கடந்த செப்டம்பர் 18-ஆம் தேதி, பென் அதிகாரி தும்சர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதை அடுத்து, சரண் வாக்மரே மீது 353 , 354  மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து இன்று கைது செய்யப்பட்டார்.
 

;