தேசம்

img

ஒடிசா பழங்குடியினத்தை சேர்ந்த முதல் பெண் விமானி!

ஒடிசா மாநிலம் மால்கங்கிரி மாவட்டத்தை சேர்ந்த அனுப்ரியா லக்ரா, முதல் பழங்குடியின பெண் விமானி என்ற பெருமையை பெற்றுள்ளார்.

ஒடிசா மாநில காவல்துறையில் ஹவில்தாராக பணிபுரியும் மரினியாஸ் லக்ராவின் மகள் அனுப்ரியா லக்ரா. இவர் புவனேஸ்வரில் உள்ள கல்லூரி ஒன்றில் பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளார். ஆனால், பைலட் ஆவதே அவரின் இலக்காக இருந்ததால் பொறியியல் படிப்பை தொடராமல், பாதியில் வெளியேறினார். இதை அடுத்து, அவர் ஏவியேஷன் அகாடமியில் சேர்ந்து, 7 ஆண்டுகால பயிற்சியை வெற்றிகரமாக முடித்தார். தற்போது, அனுப்ரியா தனியார் விமான சேவை நிறுவனம் ஒன்றில், இணை விமானியாக பணியில் சேர்ந்துள்ளார். இந்நிலையில், பழங்குடியினத்தை சேர்ந்த முதல் பெண் விமானி என்ற பெருமையை அனுப்ரியா லக்ரா பெற்றுள்ளார்.

இது குறித்து, ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தனது ட்விட்டர் பக்கத்தில், "அனுப்ரியா லக்ராவின் வெற்றியைப் பார்த்து மகிழ்ச்சி கொள்கிறேன். கடுமையான உழைப்பு மூலம் அவர் பெற்றுள்ள இந்த வெற்றி பலருக்கும் ஊக்கமாக அமையும்" எனப் பதிவிட்டுள்ளார்.
 

;