தேசம்

img

பீகாரை அடுத்து உ.பி-யில் பரவும் மூளைக்காய்ச்சல்

பீகாரை அடுத்து உத்தரப்பிரதேசத்திலும் என்செபாலிடிஸ் எனும் மூளைக்காய்ச்சல் பரவ ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர், அதிக காய்ச்சலால் வலிப்பு ஏற்பட்டு, கொராக்பூரில் உள்ள பாபா ராகவ் தாஸ் கல்லூரி மருத்துவமனையில் கடந்த மே 29-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அந்த சிறுமியை பரிசோதித்த மருத்துவர்களுக்கு, என்செபாலிடிஸ் எனும் மூளைக்காய்ச்சலின் அறிகுறிகள் போன்று தென்பட்டுள்ளன. இருப்பினும், அதிகாரிகள் இதனை உறுதிப்படுத்தவில்லை. 

முந்தைய ஆண்டுகளில் ஜூலை முதல் அக்டோபர் வரையிலான மழைக்காலத்தில், உத்தரப்பிரதேசத்தின் கிழக்கு மாவட்டங்களில் உள்ள குழந்தைகளுக்கு, மூளைக்காய்ச்சல் அதிகம் பரவியதாக கூறப்படுகிறது.  இந்நிலையில்,  தற்போது வரை பாபா ராகவ் தாஸ் கல்லூரி மருத்துவமனையில் 87 பேர் மூளைக்காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த நோயால், கடந்த 2018-ஆம் ஆண்டு 166 பேரும், கடந்த 2017-ஆம் ஆண்டில் 512 பேரும்  உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டும் உத்தரப்பிரதேசத்தில் குழந்தைகள் மூளைக்காய்ச்சல் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்படுவது தொடங்கியுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தி உள்ளதாக அம்மருத்துவமனை கல்லூரி முதல்வர் டாக்டர் கனேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
 

;