தேசம்

img

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 98 பேர் கொரோனா வைரசால் பாதிப்பு!

இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 98 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகின் 180க்கு மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி உள்ளது. இந்த நோய் தொற்றால் இதுவரை 2,83,255 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; பலி எண்ணிக்கை 11,839 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சீனாவில் 81,008 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 3,255 பேர் பலியாகி உள்ளனர். இத்தாலியில் 47,021 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 4,032 பேர் பலியாகி உள்ளனர். ஈரானில் 20,610 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 1,556 பேர் பலியாகி உள்ளனர். ஸ்பெயினில் 24,926 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 1,326 பேர் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில், இந்தியாவில் தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 298 ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 98 பேர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலியானவர்களின் எண்ணிக்கை 5 (4 இந்தியர்கள், 1 வெளிநாட்டவர்) ஆக உள்ளது. 22 பேர் குணமடைந்துள்ளனர். 
 

;