தேசம்

img

வெளிநாடுகளில் தங்கியுள்ள இந்தியர்கள் 276 பேருக்கு கொரோனா பாதிப்பு - மத்திய அரசு தகவல்

வெளிநாடுகளில் தங்கியுள்ள இந்தியர்கள் 276 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் அளித்துள்ளது.

மக்களவையில் நேற்று எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், வெளிநாடுகளில் தற்போது தங்கியுள்ள இந்தியர்கள் 276 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பதை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக ஈரானில் உள்ள இந்தியர்கள் 255 பேருக்கும், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்தியர்கள் 12 பேருக்கும், இத்தாலியில் உள்ள இந்தியர்கள் 5 பேருக்கும், ஹாங்காங் மற்றும் குவைத், இலங்கை, ரவண்டா ஆகிய நாடுகளுக்குச் சென்ற இந்தியர்கள் தலா ஒருவருக்கும் வைரஸ் பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

;