தேசம்

img

கோவிட்-19: இந்தியாவில் ஒரே நாளில் 19,459 பேர் பாதிப்பு

இந்தியாவில், ஒரே நாளில் 19,459 பேருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,02,49,460 ஆக உயர்ந்துள்ளது. அதே போல், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,04,466  ஆக உயர்ந்துள்ளது. நோய் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 55,56,634 ஆக உள்ளது. இந்த நிலையில், மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,48,318 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிய உச்சமாக 19,459 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 380 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் நாட்டில் மொத்தமாக கோவிட்-19 வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16,475 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 3,21,723 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 2,10,120 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் பரவலாக கோவிட்-19 தாக்கம் இருந்தாலும், அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 1,64,626 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 7,429 பேர் உயிரிழந்துள்ளனர். இதை தொடர்ந்து, தில்லியில், 83,077 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2,623 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 82,275 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,079 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத் மாநிலத்தில் 31,320 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,808 பேர் உயிரிழந்துள்ளனர்.

;