தேசம்

img

இந்தியாவில் பாதிப்பு 979; பலி 27 ஆனது

புதுதில்லி, மார்ச் 29- இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற் றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 பேராக  அதிகரித்துள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் நாளுக்கு நாள் பாதிப்பை அதிகரித்து வருகிறது.  இந்தியா வில், தற்போதைய நிலவரப்படி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 979 பேராக  உயர்ந்துள்ளது என்று மத்திய சுகா தாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 45 வயது நபர், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஸ்ரீநக ரில் ஒரு நபர், மகாராஷ்டிர மாநிலம் மும்பை யில் 40 வயது பெண், புல்தானாவில் 45 வயது நபர் ஆகியோர் ஞாயிறன்று உயிரிழந்தனர். இந்த 3 பேர் உயிரிழப்பையும்  சேர்த்து, நாட்டில் கொரோ னாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25 பேராக அதிகரித்துள்ளது.கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 86 பேர் குண மடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச் சகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற் றால் பாதிக்கப்பட்டோரின்  எண்ணிக்கை 40 பேரில் இருந்து 41 பேராக அதிகரித்துள்ளது தமி ழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு, இரண் டாவது கட்டத்தில் உள்ளது என அரசு தெரிவித் துள்ளது.

;