தேசம்

img

இந்தியாவில் கொரோனா பாதித்தோர் 649 பேராக அதிகரிப்பு

புதுதில்லி,மார்ச் 26- இந்தியாவில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 649 பேராக அதிகரித்துள்ளது. 

இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 649 பேராக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 124-பேருக்கும், கேரளாவில் 118-பேருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளது. 

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 42 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 13 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

;