தேசம்

img

அரியானா: சாலைவிபத்தில் சிக்கி 6 பேர் பலி

அரியானாவில் சாலை விபத்தில் சிக்கி 6 பேர் பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
அரியானாவின் ஹிஸார் மாவட்டத்தில் ராக்கி ஷாப்பூர் கிராமத்திற்கு அருகே திங்களன்று வேன்மீது ட்ரக் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் பலியாகினர். மேலும்  ஐந்து பேர் காயமடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

;