தேசம்

img

புதிய அறக்கட்டளை உருவாக்க அரசுக்கு அதிகாரமில்லை!

அயோத்தி:
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அனுமதி வழங்கிய உச்ச நீதிமன்றம், கூடவே, அப்பணிகளை மேற்கொள்வதற்கு மத்திய அரசு அறக்கட் டளை ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது. அதனடிப்படையில், மத்திய அரசும்அறக்கட்டளை தொடர்பான ஆலோசனையில் இறங்கியுள்ளது.ஆனால், ஸ்ரீராமஜென்ம பூமி நியாஸ், ஸ்ரீராமஜென்ம பூமி கோயில்அறக்கட்டளை மற்றும் ஸ்ரீராமாலயா அறக்கட்டளை என அயோத்தியில் ஏற்கெனவே பல்வேறு அறக்கட்டளைகள் செயல்பட்டு வருவதால், கோயில் கட்டும் பணியை தங்களிடம்தான் வழங்கவேண்டும் என்று அந்த அமைப்பினர்போட்டா போட்டியில் இறங்கியுள்ளனர். கோயிலைக் கட்டுவது யார்? என்பதில் சாமியார்களுக்கு இடையே மோத
லும் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், ராமாலயா அறக்கட்டளையின் செயலாளரும் சாமியாருமான அவிமுக் தேஷ்வரானந்த் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.அதில், ராமர் கோயில் கட்டும் பணியை, ராமாலயா அறக்கட்டளையிடமே ஒப்படைக்க வேண்டும் என்று கூறியுள்ள அவிமுக் தேஷ்வரானந்த், “‘ராமர் கோயில் கட்டுவதற்கு புதிதாகஒரு அறக்கட்டளையை உருவாக மத்திய அரசிற்கு அதிகாரம் இல்லை” என்றும் பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.மற்றொரு புறத்தில், அறக்கட்டளையின் தலைவர் அல்லது செயலாளர் பதவியைத் தங்களுக்குத்தான் வழங்கவேண்டும் என்று நிர்மோகி அகாரா என்ற சாமியார்கள் கூட்டமும் அரசை வலியுறுத்தியுள்ளது.

;