தேசம்

img

தலித் இளைஞரை மணந்த இளம்பெண் உயிரோடு எரிப்பு!

அமராவதி:
ஆந்திர மாநிலம் குப்பம் அடுத்த ரெட்லபல்லியை சேர்ந்தவெங்கடேஷ் - அமராவதி தம்பதியின் மகள் சந்தனா (17). அங் குள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த இவர், ஒட்டுமரி பகுதியை சேர்ந்த சீனிவாசலு - பத்மம்மா தம்பதியினரின் மகன் நந்தகுமார் (19) என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் விவகாரம் சந்தனா வீட்டிற்கு தெரியவரவே, நந்தகுமாருடன் பழகக் கூடாது என்று சந்தனாவின் பெற்றோர் தடுத்துள்ளனர். இதற்கு நந்தகுமார் தலித் வகுப்பைச் சேர்ந்தவர் என்பதே காரணம் என்று கூறப்படுகிறது.ஆனால், தனது பெற்றோர் எதிர்ப்பையும் மீறி அக்டோபர் 11-ஆம் தேதி சந்தனா, நந்தகுமாரை கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டார்.இதனிடையே நந்தகுமார் வீட்டிற்குச் சென்ற வெங்கடேஷ் - அமராவதி தம்பதி, அங்கிருந்து வலுக்கட்டாயமாக சந்தனாவை தங்கள் வீட்டிற்கு இழுத்துச் சென்றுள்ளனர். பின்னர், சந்தனாவை உயிருடன் எரித்துக் கொன்று, அஸ்தியை ஏரியில் வீசியுள்ளனர்

;