தலையங்கம்

img

தயங்குவது ஏன்?

ஒரு சில லட்சங்கள் கல்விக்கடனோ, விவசா யக் கடனோ வாங்கியவர்கள் திருப்பிச் செலுத்தா ததால் சம்பந்தப்பட்ட வங்கிகள் அவர்களின் புகைப்படங்களோடு பெயர் பட்டியலை பகிரங்க மாக வெளியிட்டு கேவலப்படுத்துகிற  நடை முறையை பின்பற்றுகின்றன. 

ஆனால் பல கோடிக்கணக்கான ரூபாய் கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் ஏமாற்றும் பெரு நிறுவனங்கள், கார்ப்பரேட் முதலாளிகள் பற்றி மூச்சுக்கூட விடுவதில்லை. அவர்களின் பெயர்க ளை கூட வெளியிடாமல் ரகசியம் காக்கின்றன. இத்தகைய நடைமுறைகளால் ஊக்கமடைந்த முதலாளிகள், நிறுவனங்கள் மேலும் மேலும் தங்களுக்கு இருக்கும் அரசியல், அதிகார பலம் மற்றும் தொடர்புகளைக் கொண்டு கடன்களை வாங்கிக் குவித்து வங்கிகளையே திவாலாக்கும் நிலைமைக்கு கொண்டு செல்கின்றனர். 

அத்தகைய நிறுவனங்கள் மற்றும் நபர்களின் பெயர்களை வெளியிடுவதற்கு ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் எவ்வித நடவடிக்கை யும் எடுப்பதில்லை. அவர்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளையே மேற்கொள்கின்றன.

வங்கிகளில் அதிகளவு கடன்களை வாங்கி விட்டு திருப்பிச் செலுத்தாத முக்கிய நபர்க ளின் பெயர்ப்பட்டியலை வெளியிட வேண்டு மென்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கோரியிருந்தார். அதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவையிலி ருந்தபோதும், அவர் பதில் கூறாமல் இணைய மைச்சர் அனுராக் தாக்குர் பதிலளித்தார். 

ஆனால் அந்த பதிலும் பட்டியல் வெளியிடு வது பற்றிய தகவல் இல்லாமலேயே இருந்தது. அத்துடன் முந்தைய ஆட்சியின்போது வங்கித் துறையில் ஏற்பட்ட நிர்வாகக் கோளாறுகள் தொடர்பான பழியை தங்கள் அரசு மீது சுமத்த காங்கிரஸ் முயற்சிக்கிறது என்று பதிலுக்கு அவர் குற்றம் சாட்டினார்.

பாஜக அரசு பதவிக்கு வந்து ஆறு ஆண்டு களை கடந்த பின்பும் முந்தைய காங்கிரஸ் ஆட்சி யின்மீது குறைகூறிக் கொண்டிருப்பது மோடி தலைமையிலான இந்த அரசு வங்கியில் கடன் வாங்கி ஏமாற்றும் மோசடிக்காரர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கையாகவே உள்ளது. அத்துடன் மோடி 2014ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் அரசாங்கம் 60 ஆண்டுகளில் செய்யாததை பாஜக அரசாங் கம் அறுபதே மாதங்களில் செய்து முடிக்கும் என்று முழங்கினார்.

ஆனால் தற்போது 60 அல்ல 72 மாதங்களை கடந்த பின்பும் வங்கிக் கடனாளிகள் மற்றும் மோசடிக் காரர்கள் மீதான உருப்படியான எந்த நடவ டிக்கையும் எடுக்கவில்லை. அதோடு 13ஆயிரம் கோடி மோசடி செய்த நீரவ் மோடி வெளி நாட்டிற்கு தப்பிச் செல்வதற்கு உதவியும் செய்தி ருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் கூட தாங்கள் ஏதோ மிகப் பெரும் நடவடிக்கையில் ஈடுபட்டு வங்கிக் கடன் மோசடியாளர்கள் மீது நட வடிக்கை எடுத்திருப்பது போல காட்டிக் கொள்ள முயல்கிறது. 

உண்மையில் வங்கிக் கடன் மோசடியாளர்கள் பற்றிய பட்டியலை வெளியிட்டாலே அது வங்கித் துறையை சீர்செய்வதற்கும் கடன் வசூல் நடை பெறுவதற்கும் உதவிகரமாக அமையும். அதை  வெளியிடத் தயங்குவதேன்?

;