வெள்ளி, ஆகஸ்ட் 7, 2020

தலையங்கம்

img

இனியாவது நினைவில் கொள்க!

சாத்தான்குளம் லாக்கப் படுகொலை  விவ காரத்தை  இன்று தேசமே உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது.  அதிகார ஆணவத்தில் நடத்தப் பட்ட இந்த கொடூர படுகொலையை மதுரை உயர்நீதிமன்ற கிளை தானாக முன்வந்து வழக்காக எடுத்துக்கொண்டு குற்றவாளிகள் கைது வரை தொடர் தலையீடு செய்தது பாராட் டத்தக்கது. குறிப்பாக நீதியரசர்கள் பி.என் . பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோர் காவல்துறை யின் சூழ்ச்சிகளை முறியடித்து விசாரணையை வழிநடத்துவது மக்களுக்கு நீதியின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த  காவல்மரண  கொடூரத்தையொட்டிய சில நிகழ்வுகளில் இருந்து காவல்துறையின் பொதுவான மனநிலையை எளிதாக புரிந்து கொள்ள முடியும். குறிப்பாக சமூகவலைத்தளங்க ளில் இந்த படுகொலையை கண்டிப்பவர்களை மிரட்டும் விதமாக சில காவலர்கள் பதிவிட்டு வந்ததை பார்க்கலாம். விசாரணைக்காக சென்ற கோவில்பட்டி முதலாவது நீதிமன்ற நடுவர் பாரதி தாசனை  மிரட்டும் வகையில் உடனிருந்த காவல் அதிகாரிகள் நடந்து கொண்டதும் தனித்த சம்பவங்கள் அல்ல. இதுதான் பெரும்பகுதி காவல்துறையின் ஒட்டுமொத்த மன நிலை யாக இருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. 

இந்த மனநிலை உருவானதற்கு காவல்துறை மட்டும் காரணமல்ல. அதனை வழிநடத்தும் ஆட்சியாளர்களும் காரணம் என்பதையும் இணைத்துப் பார்க்க வேண்டும். ஆளுபவர்க ளின் தவறுகளுக்கு உடந்தையாக இருந்தால் போ தும்; எந்த தவறு செய்தாலும் தப்பித்துக்கொள்ள லாம் என்ற நிலை காவல்துறையில் எதார்த்த மாக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையையும் கணக்கில் கொண்டே உயர்நீதிமன்ற நீதிபதிகள் கொலைகாரர்களுக்கு எதிராக சாட்சியமளித்த காவலர் ரேவதியை செல்போனில் தொடர்பு கொண்டு நேரடியாக பேசி பாதுகாப்பிற்கான நம் பிக்கையை அளித்திருக்கின்றனர்.இது வரலாற்றுச் சிறப்பு மிக்க வரவேற்க வேண்டிய நிகழ்வு. 

தமிழகத்தில் காவல்துறையை தண்டிக்க எந்த  ஆளும் அரசும் அவ்வளவு எளிதாக அனுமதிப்ப தில்லை. அதனை எழுதப்படாத விதியாக வைத்திருக்கின்றனர். அது ஒழிக்கப்பட வேண்டும். வாச்சாத்தி, திருகோவிலூர், நாலு மூலைகிணறு, ஏன் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு வரை அதுதான் நடக்கிறது. இந்த நிலையிலும் கூட சாத்தான்குளம்  காவல் நிலைய இரட்டை படுகொலை வழக்கில் நீதிபதியை அவமதித்த, அச்சுறுத்திய ஏஎஸ்பி, டிஎஸ்பி இருவரையும் தமிழக அரசு காத்திருப்பு பட்டி யலிலிருந்து எடுத்து புதிய பதவிகளை வழங்கி யிருக்கிறது.  இந்த நடவடிக்கை மீண்டும் தவறி ழைக்கும் காவலதுறையினரை தமிழக அரசு பாதுகாக்க முயற்சிப்பதையே காட்டுகிறது. 

சாத்தான் குளம் சம்பவம் போன்று தமிழ கத்தில் இனி நடக்க கூடாது என்று உயர்நீதி மன்றம் அறிவுறுத்தியிருப்பதை அரசு நினைவில் கொள்ள வேண்டும். இந்த நிலையிலாவது தமிழக அரசு காவல்துறையை மக்களின் பாது காவலர்களாக இருக்கும் வகையில் சீர்திருத்தம் செய்வதற்கான நடவடிக்கையை  எடுத்திட முன்வர வேண்டும்.

;