தலையங்கம்

img

மனித உரிமையும் கொலை செய்யப்படுகிறது

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் வியாபாரிகளான தந்தை யும் மகனும் போலீசாரின் மிருகத்தனமான தாக்குதலால் உயிரிழந்திருப்பது அதிர்ச்சிய ளிக்கிறது. லாக்அப் சாவுகள் என்ற பெயரில் போலீசாரால் அடித்துக் கொல்லப்படுவது அப்பாவி பொதுமக்கள் மட்டுமல்ல, மனித உரி மைகளும்தான்.

கொரோனா கால கட்டுப்பாடுகளால் அனைத்துப் பகுதி மக்களும் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். கடை வியாபாரத்தை நம்பி பிழைக்கும் வர்த்தகர்களும் இதில் அடங்குவர். எனினும் பொது சுகாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு வர்த்தகர்கள் முழு ஒத்து ழைப்பு வழங்கி வருகின்றனர். 

சாத்தான்குளத்தில் ஜெயராஜ் என்ற ஓர் எளிய வணிகர், அறிவிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி கடை வைத்திருந்ததாக கூறி அவரை காவல் நிலை யத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதை கேள்விப்பட்டு அவருடைய மகன் பென்னிக்ஸ் அங்கு சென்றபோது இருவரையும்  போலீசார் கொ டூரமாக தாக்கியுள்ளனர். நேரம் கடந்து கடையை திறந்து வைத்திருந்ததால் வழக்கு பதிவு செய்யலாம்; ஏதோ பெரிய கிரிமினல்கள் போல அவர்களை கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன?

அங்கு இருவரும் போலீசாரால் கடுமை யாக தாக்கப்பட்டதையும், அவர்கள் வலி பொறுக்க முடியாமல் அலறியதையும் பலரும் கேட்டுள்ளனர். இருவரையும் கைது செய்து தொலை தூரத்தில் உள்ள கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்துள்ளனர். அடுத்தடுத்து மகனும், தந்தையும் பலியாகியுள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வர்த்தகர்கள் கடையடைப்பு நடத்தியுள்ளனர். குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடு பட்டுள்ளனர். இவ்வளவுக்கு பிறகும் தூத்துக்குடி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர், இருவ ருக்கும் இதயம் சம்பந்தமான நோய் இருந்ததாக வும், அதற்கு மருந்து சாப்பிடுவதை ஒப்புக் கொண் டதாகவும் கூறி போலீசார் நடத்திய கொலையை அப்பட்டமாக மறைக்க முயல்கிறார்.

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மீதான முதல் தகவல் அறிக்கையில், விசாரணைக்கு ஒத்து ழைக்க மறுத்து தரையில் விழுந்து புரண்ட தாகவும் இதனால் ஊமைக் காயம் ஏற்பட்டதாக வும் கூறப்பட்டிருப்பது குற்றமிழைத்த காவல் துறையினரை காப்பாற்ற செய்யப்படும் அப் பட்டமான முயற்சியாகும்.

நீதிமன்றம் மற்றும் மனித உரிமை ஆணை யத்தின் தலையீடுகள் மற்றும் சமூக அழுத்தம் காரணமாக சில போலீசார் இடை நீக்கம் செய்யப் பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இடை நீக்கமும் இடமாற்றமுமே போதுமானதல்ல. பார பட்சமற்ற விசாரணை மூலம் உண்மை வெளிக் கொண்டு வரப்பட வேண்டும். வியாபாரிகளை தாக்கி கொலை செய்த காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். லாக் அப்  கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.

;