தலையங்கம்

img

கல்விக் கடனை வசூலிப்பதை கடன்காரனிடம் ஒப்படைப்பதா?

பொதுத்துறை வங்கிகளிடமிருந்து மாண வர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கல்விக் கடனை வசூலிக்கும் பொறுப்பை அம்பானியின் ரிலை யன்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளனர்.  உயர் கல்வித்துறை கொஞ்சம் கொஞ்சமாக தனியா ருக்கு தாரை வார்க்கப்படுகிறது. மோடி அரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கை நடைமுறைக்கு வருமானால் உயர் கல்வித்துறை முற்றிலுமாக தனியாரிடம் சென்று விடும் ஆபத்து உள்ளது.  இந்த நிலையில் மாணவர்களுக்கு ஓரளவு கை கொடுத்தது கல்விக் கடன் திட்டம். இந்த திட்டம் துவக்கப்பட்டபோது, கல்விக் கடன் பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வரை கடன் தொகைக்கான வட்டியை அரசே செலுத்தும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வேலை கிடைக்காவிட்டாலும் கூட குறிப்பிட்ட காலத்தில் வட்டியுடன் அசலையும் கட்ட வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. வேலை வாய்ப்பும் குதிரைக் கொம்பாகி வரும் நிலையில் கல்விக்கடனை கட்டமுடியாமல் பல குடும்பங்கள் தத்தளிக்கின்றன.

இந்தநிலையில், பாரத ஸ்டேட் வங்கி கல்விக்கடனை வசூலிக்கும் பொறுப்பை ரிலை யன்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது. வசூ லிக்கப்படும் தொகையில் ஸ்டேட் வங்கிக்கு 55 சதவீதம், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு 45 சத வீதம் என பிரித்துக் கொள்ளப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய ஒரு கேவல மான ஒப்பந்தத்தை வேறு எங்கும் பார்க்க முடி யாது. ஒரு நயா பைசாக்கூட தராத ரிலையன்ஸ் நிறுவனம் சுளையாக 45 சதவீதத்தை விழுங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரிலை யன்ஸ் நிறுவனம் ஏராளமான அடியாட்களை யும், குண்டர்களையும் வைத்துள்ளது. இவர்கள் சட்ட விரோதமான வகைகளில் மிரட்டி கல்விக் கடனை வசூலிக்கின்றனர்.  ஏற்கெனவே மதுரை அனுப்பானடியைச் சேர்ந்த லெனின் என்ற பொறியியல் பட்டதாரி ரிலையன்ஸ் நிறுவனத்தின் மிரட்டலின் காரண மாக தற்கொலை செய்து கொண்ட கொடுமை நடந்தது. இதேபோன்ற சம்பவங்கள் இனி அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

பொதுத்துறை வங்கிகளிடம் பெற்ற கடனை திரும்பச் செலுத்த முடியாமல் ரிலையன்ஸ் நிறுவ னம் திவாலாகும் நிலைக்கு சென்றது. ரிலை யன்ஸ் இண்டஸ்ரி நிறுவனத்திற்கு மட்டும் 3 லட்சம் கோடி அளவுக்கு கடன் உள்ளது. இத னால் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தன்னு டைய சொத்துக்களை விற்று வருகிறது. பொதுத் துறை வங்கிகளிடம் அம்பானி வகையறா பெற்றக் கடனை முற்றாக ரத்து செய்ய வேண்டும் என கூக்குரல் எழுப்பப்படுகிறது. இது நியாய மான ஒன்று என மத்திய ஆட்சியாளர்களும் அவர்களது ஊதுகுழல்களும் பேசி வரும் நிலை யில் கடன்கார ரிலையன்ஸ் நிறுவனத்திடம் மாணவர்கள் கல்வி பெற பெற்றக் கடனை கந்து வட்டிக்காரன் போல வசூலிக்கும் பொறுப்பை ஒப்படைப்பது எந்த வகையில் நியாயம்?  மோடி அரசு அனைத்து வகையிலும் இந்திய மக்களை வஞ்சித்து அம்பானி, அதானி வகை யறாவுக்கே சேவை செய்து வருகிறது. இந்த அநியாயத்தை தடுத்து நிறுத்தாவிட்டால் ரிலையன்ஸ் கொள்ளையர்களிடம் மாணவர்கள் சிக்கி சீரழிவதை தடுக்க முடியாது.

;