தலையங்கம்

img

புலிகள் முக்கியம்தான்; மக்கள் முக்கியமில்லையா?

தேசிய புலிகள் தினமான 2019  ஜூலை 29 அன்று புலிகள் கணக்கெடுப்பு தகவல்களை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.  உலகிலேயே ‘புலிகளின் மிக பாதுகாப்பான வாழ்விடமாக’ இந்தியா திகழ்கிறது என அதில் தெரிவித்தார்.  புலிகள் கணக்கெடுப்பு குறித்த அந்த தகவலில், கடந்த 2014-ல் கணக்கிடப்பட்ட புலிகள் எண்ணிக்கையை விட, இம்முறை 33 சதவீதம் அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி இந்தியாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கை 2,967 என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2014 கணக் கெடுப்பை விட, இது தோராயமாக 741க்கும் மேற்பட்ட எண்ணிக்கையை கொண்டிருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் 33 சதவீதம் அள விற்கு புலிகளின் எண்ணிக்கை உயர்வு என்பது ‘எந்திரகதியான வளர்ச்சி’ யாக கருதப்படுகிறது.

மறுபுறம், இதே காலகட்டத்தில் காடுகளை வாழ்விடமாக கொண்டுள்ள பல்லாயிரக்கணக் கான ஆதிவாசி மக்களின் நிலம் மற்றும் வன உரிமையை மத்திய அரசு பறித்திருக்கிறது என்பது வெளியில் வரவில்லை. மக்களை வெளியேற்றி விட்டுத்தான் புலிகளின் புகலிடமாக மக்களின் வனங் கள் மாற்றப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் நடக்கும் இந்த இரண்டு நிகழ்வுகளும் முரண்பாடானவை. இதற்கு புலிகள் கணக்கெடுப்பே ஆதாரம். ஏற்கெனவே உள்ள  புலிகளின் வாழ்விடங்கள் சுருக்கப்பட்டதன் விளைவாக புலிகள் தங்களது பழைய வாழ்விடங்களை விட்டு வெளியேறி, புதிய வனப் பகுதிகளில் குடியேறுகின்றன. எடுத்துக்காட்டாக, கடந்த 2014-ம் ஆண்டிலி ருந்து சுமார் 40 ஆயிரம் ஹெக்டேர் வன நிலங்களி லிருந்து புலிகள் வெளியேறி இருக்கின்றன. குறிப்பாக புலிகளின் வாழ்விடம் என  வகைப்படுத் தப்படாத வனப் பகுதிகளின் 25 ஆயிரம் ஹெக்டேர் நிலங்களில் குடியேறியுள்ளன. ‘புலிகளின் வாழ்விடம்’ என வரையறுக்கப்பட்டுள்ள புக்சா (மேற்குவங்கம்), டம்பா (மிசோரம்) மற்றும் பாலமாவ் (ஜார்க்கண்ட்) உட்பட இன்றைக்கு புலிகள் இல்லாத பகுதியாக மாற்றப்பட்டு விட்டன. ஆனால் மத்தியப் பிரதேசத்தில் மட்டும் தோராயமாக புதிதாக 7 லட்சம் ஹெக்டேர் வன நிலங்களை புலிகள் ஆக்கிரமித்தி ருக்கின்றன என  தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் அடிப்படை என்னவென்றால், இரை தேடி புலிகள் காலி செய்த வன நிலங்களை மீண்டும் அவற்றின் வாழ்விடங்களாக சீரமைப்பதற்கு பதிலாக, அந்த வனங்களை கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்த்து, அதன் மூலம் கொள்ளை லாபம் பெறவும்  புலிகளுக்கு புதிய வாழ்விடங்களை அமைக்கவும் மோடி அரசு திட்டமிட்டு செயல் பட்டதுதான். புலிகளின் இடம் கார்ப்பரேட்டுக ளுக்கு; மக்கள் வாழும் வனம் புலிகளுக்கு; வெற்று வீதிகள் வன மக்களுக்கு என்று, உயிரி சூழலையே சிதைக்கிறது மோடி அரசு.  வனங்களில் வாழும் ஆதிவாசி மக்களுக்கான சட்டரீதியிலான உரிமைகள் அனைத்தும் ஏற்கனவே வன உரிமைச் சட்டப்படி வழங்கப் பட்டுவிட்டன. ஆனால் புலிகள் முக்கியமாயிற்றே  என்று, வன உரிமையைப் பறித்து, அந்த சட்டத் தையே அழிக்கிறது மோடி அரசு.  கொதித்துப் போயுள்ளனர் பழங்குடி மக்கள்.

;