தலையங்கம்

img

பிரதமர் சொல்வது யாருடைய வளர்ச்சி?

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச் சரவை கூடி பல்வேறு முடிவுகளை எடுத்துள் ளது. இந்த முடிவுகள் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த உதவும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

 நாடு முழுவதும் உள்ள சுமார் 1482 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் மற்றும் பல மாநிலங்களில் கிளைகளைக் கொண்டுள்ள 58 கூட்டுறவு வங்கி களை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு  வர இருப்பதாகவும், இதற்காக அவசரச் சட்டம் கொண்டு வரப்போவதாகவும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவை விளக்கிப் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

கொரோனா நோய்த் தொற்று மற்றும் பொரு ளாதார நெருக்கடியை பயன்படுத்திக் கொண்டு மாநில அரசுகளின் உரிமைகளை மத்திய அரசு பறித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கையும் இருக்கலாம் என்ற ஐயப்பாடு எழுவது இயல்பே. இனிமேல் ரிசர்வ் வங்கி வகுக்கிற விதிமுறைகள் மற்றும் வட்டி விகிதத்திற்கேற்பவே கூட்டுறவு வங்கிகள் செயல்பட வேண்டியிருக்கும். விவசாயக் கடன் உட்பட கூட்டுறவு வங்கிகள் செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்கள் இதனால் கேள்விக் குறியாகும்.

இது ஒருபுறமிருக்க விண்வெளி ஆய்வுத் துறையில் சீர்திருத்தம் என்ற பெயரில் தனியாரை அனுமதிப்பதற்கான முடிவையும் மத்திய அமைச்சரவை எடுத்துள்ளது. இந்திய விண் வெளி ஆய்வுத்துறை பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. இதனால் நாட்டு மக்களுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்பட்டுள்ளன. இனி மேல் தனியார் முதலாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டே விண்வெளி ஆய்வு என்பது நடைபெறும்.

பாதுகாப்புத்துறை தொடர்புடைய ராணுவ தளவாட உற்பத்தி உட்பட தனியாருக்கு தரப் பட்டுவிட்ட நிலையில், சுரங்கங்கள், வனங்கள் என இயற்கை வளம் அனைத்தும் தனியார் முத லாளிகளின் லாப வேட்டைக்கு திறந்து விடப் படும் நிலையில் விண்வெளி ஆய்வையும் தனி யாரிடம் தருவது நாட்டின் சுயசார்பையும், அறி வியல் துறை சார்ந்த ஆய்வையும் காவு கொடுப்ப தற்கே ஒப்பாகும்.

பிரதமர் ஒருபுறத்தில் சுயசார்பு பொருளா தாரம் என்று பேசிக் கொண்டு மறுபுறத்தில் அனைத்தையும் கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளைக்கு திறந்து விடுகிறார். இதன் மூலம் சுயசார்பை எட்டுவது எப்படி என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

பெட்ரோல், டீசல் விலை ஒவ்வொரு நாளும் தொடர்ந்து உயர்த்தப்படுவதால் அனைத்துப் பொ ருட்களின் விலைவாசி கடுமையாக உயர்ந்து வரு கிறது. இதனை குறைக்க மோடி அரசு எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை. இதனிடையே ஏடிஎம்மில் பணம் எடுக்க விதிக்கப்பட்டிருந்த நிபந்தனைக ளும் ஜூலை 1ஆம் தேதி முதல் மீண்டும் அம லுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு எதிராக மோடி அரசு போராட வில்லை. மாறாக உள்நாட்டு மக்களை வதைப்ப திலேயே குறியாக உள்ளது.

;