தலையங்கம்

img

இந்தியா - 3374, தமிழ்நாடு - 571

முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

புதுதில்லி, ஏப்.5- கொரோனா பாதிப்பு எதிரொலியாக முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து உள்ளது.  கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.  கடந்த மார்ச் 24 அன்று நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்த ரவு அன்று நள்ளிரவு முதல் ஏப்ரல் 14 வரை அம லில் இருக்கும்.  பொதுமக்கள் அளிக்கும் ஒத்து ழைப்புக்கு ஏற்ப பாதிப்பு மற்றும் பரவல் கட்டுக்குள் வரும் என்று அரசு எச்சரிக்கை செய்து வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 75ல் இருந்து 79 ஆக உயர்ந்துள்ளது.  நாட்டில் கொரோனா பாதித்தோ ரில் அதிக எண்ணிக்கையுடன் மகாராஷ்டிரா உள் ளது. இங்கு 690 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், தமி ழகத்தில் ஞாயிறு மாலை 6 மணி நிலவரப்படி 571 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரேநாளில் 86 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள தாக சுகாதார செயலாளர் பீலா ராஜேஸ் தெரி வித்தார். தமிழகத்தில் பலி எண்ணிக்கையும் 5 ஆக அதிகரித்துள்ளது. சென்னை ஸ்டான்லி மருத்துவ மனையில் உயிரிழந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த 71 வயது முதியவர் மற்றும் சென்னையை சேர்ந்த 60 வயது முதியவர் ஆகியோரின் மரணத்தால் எண்ணிக்கை 5 ஆகியுள்ளது. இதைத் தொடர்ந்து தில்லி மாநிலத்தில் 445 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நான்காவதாக கேரளத்தில் பாதிப்பு 306 ஆக உள்ளது.

இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கையும் 3,374 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளது.  இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பு டைய விவகாரங்கள் பற்றி முன்னாள் ஜனாதிபதி களான பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதீபா பாட்டீல் ஆகியோருடன் ஞாயிறன்று ஆலோசனை மேற்கொண்டார்.

இதேபோன்று முன்னாள் பிரதமர்களான மன்மோகன் சிங் மற்றும் தேவகவுடா ஆகியோ ருடனும் அவர் ஆலோசனை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து நாட்டின் பல்வேறு அரசி யல் கட்சி தலைவர்களுடனும் ஆலோசனையில் ஈடு பட்டார். காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் பிரகாஷ் சிங் பாதல் ஆகியோருடனும் பிரதமர் ஆலோசனை மேற்கொண்டார்.

;